முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5–வது முறையாக பதவி ஏற்றுள்ள ஜெயலலிதாவுக்கு பாராட்டு : வணிகர் சங்க பேரமைப்பு

வெள்ளிக்கிழமை, 29 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் க.மோகன் வரவேற்புரை நிகழ்த்தினார். மண்டல தலைவர்கள் கூடுதல் செயலாளர்கள் , மாநில செய்தி தொடர்பாளர் , மாவட்ட தலைவர் கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். முடிவில் பொருளாளர் கோவிந்த ராஜூலு நன்றி கூறினார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
* தமிழக முதல்–அமைச்சராக 5–வது முறையாக பதவி ஏற்றுள்ள ஜெயலலிதாவுக்கு இக்கூட்டம் வாழ்த்து, பாராட்டு தெரிவிக்கிறது.
* வணிக வரிதுறை அதிகாரிகளின் தவறான நடவடிக்கைகளால் ஆயிரக்கணக்கான வணிகர்கள் பாதிக்கப்படுகின்றனர். உத்தேச வரி விதிப்பு அதிகாரத்தை அதிகாரிகள் தவறாக பயன்படுத்துகின்றனர்.
எனவே மதிப்பு கூட்டு வரி சட்டத்தில் உள்ள உத்தேச வரி விதிப்பு அதிகாரத்தை நீக்க முதல்–அமைச்சர் உத்தரவிட வேண்டும். வியாபாரிகளின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகளை அழைத்து முதல்–அமைச்சர் பேச வேண்டும்.

வணிகம் சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகளில் லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாய நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டு வருகின்றனர். மே–5 வணிகர் தின மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி லஞ்சத்தில் இருந்து வியாபாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதத்தில் மாநிலம்–மாவட்ட வாரியாக வணிகர்கள்–சட்ட வல்லுனர்களை கொண்ட லஞ்ச ஒழிப்பு–வணிக பாதுகாப்பு செயலாக்க குழுக்களை அமைப்பது என முடிவு செய்யப்படுகிறது. மாநில அளவில் தலைவர் விக்கிரமராஜா தலைமையிலும், மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட தலைவர்கள் தலைமையிலும் குழு அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து