முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் நோன்பின் போது சாப்பிட்ட 2 சிறுவர்களை தூக்கிலிட்ட ஐ.எஸ்.

செவ்வாய்க்கிழமை, 23 ஜூன் 2015      உலகம்
Image Unavailable

பீருட் - முஸ்லிம் மக்களால் ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படும் நிலையில், அதனை மீறி உணவு சாப்பிட்ட சிறுவர்களை ஐ.எஸ். அமைப்பினர் தூக்கிலிட்டதாக சிரியாவில் செயல்படும் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. "டையர் எஸ்ஸார் மாகாணத்தைச் சேர்ந்த 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 2 பேர் தூக்கிலேற்றிக் கொல்லப்பட்டனர்.

அவர்கள் இருவருமே காலை முதல் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டனர்.  பின்னர் மாலை சூரியன் மறைந்த பிறகு ஜிகாதிகளால் தூக்கிலிடப்பட்டனர். சிறுவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஜிகாதிகளிடம் சிக்கியதே இதற்கு காரணம்" என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், விரதத்தை மீறி உணவு சாப்பிட்டதால், தூக்கிலேற்றப்பட்ட சிறுவர்கள் அருகே, "மத நம்பிக்கையை மீறி நோன்பை மறுத்தவர்கள்" என்று எழுதப்பட்ட பதாகை வைக்கப்பட்டிருந்தாக அங்கு வாழும் மக்கள் குறிப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

வாசகர் கருத்து

1 கருத்துகள்

  1. Anonymous June 23, 21:49

    மனிதர்களாக இருக்கவே லாயக்கற்றவர்கள்

    Reply to this comment
    View all comments

    வாசகர் கருத்து