முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.கே.நகரில் இன்று ஓட்டு எண்ணிக்கை

திங்கட்கிழமை, 29 ஜூன் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்று ராணி மேரி கல்லூரியில் தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் பகல் 11- மணிக்குள் வெளியாகும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அறிவித்துள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத்தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 27 ந்தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா வேட்பாளராக போட்டியிட்டதால் மக்கள் பெரும் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் நடைபெற்றது. இதற்காக வாக்கு எண்ணிக்கை இன்று சென்னை கடற்கரையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் காலை 8 மணிக்கு தொடங்குகிறது.முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கைக்காக மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 17 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்படும் என்று தேர்தல் அதிகாரி சந்தீப் அறிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கையின்ஒவ்வொரு மேசைக்கும் நியமிக்கப்பட்ட ஊழியர்களை தவிர ஒரு மைக்ரோ பார்வையாளரும் நியமிக்கப்படுவார். அந்த மைக்ரோ பார்வையாளர்கள் ( நுண்பார்வையாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர்கள் மத்திய அரசு ஊழியர்களாக இருப்பார்கள் வாக்குஎண்ணிக்கை சூப்பர்வைசர் ஒருவரும் பணியமர்த்தப்படுவார். அவர் வாக்குஎண்ணிக்கையின் முடிவை அறிவிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர்கள்., உதவியாளர்கள். நுண் பார்வையாளர்கள் வாக்கு எண்ணிக்கை ஊழியர்கள் தவிர மற்றவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். வாக்கு எண்ணிக்கை மையங்களில் செல்போன்கள் கொண்டு செல்ல தடை விதி்க்கப்படும். என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும் . பகல் 11-30 மணிக்குள் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற வேட்பாளருக்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்படும். .வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க சென்னை தலைமைசெயலகத்தில் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ மூலம் பதிவு செய்யப்படும். தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் பெற்றவர்கள் தவிர மற்றவர்கள் யாரும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நிருபர்களிடம் மேலும் கூறியதாவது.:

ஆர்.கே.நகரில் உள்ள 230 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒரே ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் எண் 181 மட்டும் மறு வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டது. இந்த வாக்குசாவடியில் முந்தைய அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு புதிய ஊழியர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த வாக்குசாவடியில் மொத்தம் உள்ள 332 வாக்குகளில் 284 வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. இதன் சதவீதம் 85.54 ஆகும் வாக்குப்பதிவில் ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகரின் ஒட்டு மொத்த வாக்குப்பதிவு 74.47 சதவீதம் . இதில் ஆண்களின் வாக்குகள் 73.62 சதவீதமும் பெண்களின் வாக்குகள் 75.35 சதவீதமும் பதிவாகியிருக்கிறது. மொத்தமுள்ள 2 லட்சத்து 43 ஆயிரம் வாக்குகளில் 1 லட்சத்து 81 ஆயிரம் வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிலையில் மறுவாக்குப்பதிவை ஆர்.கே.நகர் பொதுப்பார்வையாளர் ஜோதி கலாஷ், தேர்தல் நடத்தும் அதிகாரி சவுரிராஜன் ஆகியோரும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மகேந்திரனும் பார்வையிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து