முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லலித் மோடியை கொண்டு வர முடியுமா ? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் சூடான கேள்வி

சனிக்கிழமை, 4 ஜூலை 2015      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி - தாவூத் இப்ராஹிமை கொண்டு வருவேன் என்று அடிக்கடி சொல்லும் பிரதமர் மோடி, குறைந்தபட்சம் லலித் மோடியையாவது இந்தியாவுக்கு கொண்டு வருவாரா என காங்கிரஸ் கட்சி சவால் விடுத்துள்ளது. மும்பை குண்டு வெடிப்பில் மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராஹிம் சரணடைவதை அப்போதைய சரத்பவார் அரசு நிராகரித்தது என்று பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு தேசியவாத காங்கிரஸ் விளக்கமளித்துள்ளது. தாவூத் இப்ராஹிம் சரணடையும் விசயத்தில் சில நிபந்தணைகள் போடப்பட்டதாகவும், அதனால் தான் அது நிராகரிகப்பட்டது என்றும் சரத்பவார் கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ரஷித் ஆல்வி டெல்லியில் இது பற்றி கூறியதாவது., தாவூத் இப்ராஹிம் ஒரு குற்றவாளி, அவர் செய்ததை ஏற்றுக்கொள்ளவும் முடியாது, சகித்து கொள்ளவும் முடியாது எனவே திரும்ப கொண்டு வருவதுதான் இந்திய அரசின் கடமையாகும். தாவூத் இப்ராஹிமை கொண்டு வருவேன் என்று பிரதமர் மோடி அடிக்கடி கூறுகிறார். ஆனால் நாங்கள் (காங்கிரஸ்) ஒன்று கேட்க விரும்புகிறோம். முதலில் அவர் லலித் மோடியை கொண்டுவரட்டும். பிறகு தாவூத் இப்ராஹிமை பற்றி யோசிப்போம். இருவருமே சட்டத்தின் முன்பு ஒப்படைக்கப்பட வேண்டும். இவ்வாறு ரஷித் ஆல்வி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

வாசகர் கருத்து

1 கருத்துகள்

  1. Anonymous July 4, 21:29

    கையாலாகாத கபோதிகளே .பத்து வருடம் ஆட்சியில் இருந்தீர்களே அப்போது என்ன செய்தீர்கள் ஊழல் செய்வதிலேயே காலம் கடத்தி விட்டீர்கள். இனி என்றும் காங்கிரஸ் ஆட்சிக்கு வர இயலாது. காந்தி சொன்னதுபோல் கட்சியை கலைத்து விடுவதே மேல்

    Reply to this comment
    View all comments

    வாசகர் கருத்து