Idhayam Matrimony

இலங்கைக்கு எதிரான இறுதி டெஸ்ட் : பாக். வீரர் யூனிஸ்கான் புதிய சாதனை

செவ்வாய்க்கிழமை, 7 ஜூலை 2015      விளையாட்டு
Image Unavailable

கொழும்பு: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் புதிய உலக சாதனையை படைத்தார். பாகிஸ்தான் அணி, இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், 2வது டெஸ்டில் இலங்கை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வென்ற நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி பல்லகெலே சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்தது.

இலங்கை இரு இன்னிங்சுகள் ஆடிவிட்ட நிலையில், பாகிஸ்தான் வெற்றிக்கு 377 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 7 ஓவர்களிலேயே 13 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், தொடக்க வீரர் ஷான் மசூத் மற்றும் அனுபவ வீரர் யூனிஸ்கான் ஆகியோர் சிறப்பாக ஆடி அணியை மீட்டெடுத்தனர். நேற்று முன்தினம் ஆட்ட நேர இறுதியில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 230 ரன்களை எடுத்திருந்தது. ஷான் மசூத் 114 ரன்களுடனும், யூனிஸ்கான் சதத்தை கடந்தும் களத்தில் நின்றனர். யூனிஸ்கான் சதமடித்தார்.

டான் பிராட்மேன், டெஸ்ட் போட்டிகளில் 29 சதங்கள் குவித்திருந்த நிலையில், யூனிஸ்கான், 30 சதங்களை விளாசி, பிராட்மேன் சாதனையை முந்தியுள்ளார். இந்த பட்டியலில் 51 சதங்களுடன், இந்தியாவின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். 30 சதங்கள் அடித்த வீரர்களான ஆஸி.யின் மேத்யூ ஹேடன் மற்றும் வெஸ்ட் இண்டீசின் சந்தர்பால் ஆகியோருடன் யூனிஸ்கான், 8வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

பாகிஸ்தானை பொறுத்தளவில் யூனிஸ்கான் 30 சதங்கள் விளாசிய முதல் பேட்ஸ்மேன் ஆகும். இவருக்கு அடுத்ததாக இன்சமாம் உல்-ஹக் 25 சதங்கள், முகமது யூசுப் 24 சதங்கள், ஜாவித் மியாண்டட் 23 சதங்கள், சலீம் மாலிக் 15 சதங்கள் விளாசியுள்ளனர். யூனிஸ்கான் தற்போது விளாசிய சதம், புதிய உலக சாதனையொன்றையும் படைத்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் 4வது இன்னிங்ஸ்சில் மட்டும் யூனிஸ்கான் இதுவரை 5 சதங்கள் விளாசியுள்ளார். இது தான் அந்த புதிய சாதனை.

முன்னதாக, சுனில் கவாஸ்கர், ரிக்கி பாண்டி், வெஸ்ட் இண்டீசின் ராம்நரேஷ் சர்வான், தென் ஆப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித் ஆகியோர் தலா 4 செஞ்சுரிகளை, 4வது இன்னிங்சில் அடித்திருந்தனர். சச்சின் கூட 3 செஞ்சுரிகள்தான் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து