எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.
“அமெரிக்க மக்களுக்கு மீண்டும் சுதந்திரத்தை கொடுப்பதற்காக அமெரிக்கா கட்சியை தொடங்கி உள்ளோம். நமது தேசத்தை வீண் செலவு மற்றும் ஊழல் மூலம் திவால் செய்கின்றனர். இதை பார்க்கும்போது நாம் ஜனநாயக ஆட்சி முறையின் கீழ் இல்லாமல் ஒரு கட்சி முறையின் கீழ் தான் வாழ்கிறோம் என்பது தெரிகிறது” என தனது எக்ஸ் தளத்தில் மஸ்க் கூறியுள்ளார்.
முன்னதாக, எக்ஸ் தளத்தில் அமெரிக்க சுதந்திர தினத்தன்று (ஜூலை 4) ‘அமெரிக்க கட்சி’ என்ற புதிய கட்சி தொடங்குவது குறித்து மஸ்க் கேள்வி எழுப்பி இருந்தார். ‘யெஸ்’ அல்லது ‘நோ’ பாணியில் மேற்கொள்ளப்பட்ட இந்த சர்வேயில் சுமார் 12 லட்சத்துக்கும் மேலானவர்கள் பங்கேற்றனர். அதில் 65 சதவீதம் பேர் ‘ஆம்’ என்று பதில் அளித்தனர்.
இதையடுத்து, “இரண்டில் ஒருவருக்கு புதிய அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என கூறியுள்ளனர். அது நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்” என சனிக்கிழமை அன்று மஸ்க் உறுதி அளித்திருந்தார். இந்நிலையில், சொன்னபடி அமெரிக்க கட்சியை தொடங்கி உள்ளார். டொனால்டு ட்ரம்ப் அரசு முன்மொழிந்த ‘பிரமாண்டமான பட்ஜெட்; அழகான பட்ஜெட்’ என்ற மசோதா அமலுக்கு வந்த மறுநாளே அரசியல் கட்சி தொடங்குவேன் என மஸ்க் சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த மசோதா அண்மையில் அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


