எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : வருமான சமத்துவத்தின் அடிப்படையில் உலகளவில் நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
வருமான சமத்துவத்துக்கான கினி குறியீட்டில் இந்தியா 25.5 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் ஸ்லோவாக் குடியரசு 24.1 மதிப்பெண்களும், ஸ்லோவேனியா 24.3 மதிப்பெண்களும், பெலாரஸ் 24.4 மதிப்பெண்களும் பெற்று முதல் மூன்று இடங்களில் உள்ளன.
2011-12 மற்றும் 2022-23 க்கு இடையில் இந்தியாவில் வருமான சமத்துவமின்மை கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் உலகளவில் நான்காவது வருமான சமத்துவம் கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது என்று உலக வங்கி அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் தீவிர வறுமை விகிதம் பெரிய அளவில் குறைந்ததே, வருமான சமத்துவமின்மை குறைய காரணமாகியுள்ளது. இந்தியாவில் தீவிர வறுமை விகிதம் 2011-12ல் 16.2% லிருந்து 2022-23 இல் 2.3% ஆகக் குறைந்துள்ளது என்று உலக வங்கியின் தரவுகள் தெரிவித்துள்ளன.
சமத்துவத்தின் அளவீடான சிறந்த கினி குறியீட்டு மதிப்பெண்களில், சீனா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளை விட இந்தியா மிகவும் சிறந்த நிலையில் உள்ளது. இந்தப் பட்டியலில் சீனா 35.7 மதிப்பெண்களையும், அமெரிக்கா 41.8 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


