எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லண்டன்: அடுத்தப் போட்டியில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன் என்று இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்தார்.
சூர்யவன்ஷி சதம்...
19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற 4ஆவது போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 363 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 78 பந்தில் 13 பவுண்டரி, 10 சிக்சர்களுடன் 143 ரன்கள் விளாசினார். 52 பந்தில் சூர்யவன்ஷி சதம் விளாசினார்.
சாதனை...
இதன்மூலம் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக பாகிஸ்தான் வீரர் கம்ரான் குலாம் 53 பந்தில் சதம் அடித்திருந்தார். மேலும், 10 சிக்சர்கள் அடித்து ஒரு போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஐ.பி.எல். தொடரில் 35 பந்தில் சதம் விளாசி சாதனைப் படைத்திருந்தார்.
200 ரன்கள் குவிக்க...
அதிவேக சதம் விளாசி 143 ரன்கள் குவித்த பின்பு பேசிய வைபவ் சூர்யவன்ஷி, "சுப்மன் கில் 100 மற்றும் 200 ரன்கள் எடுத்தபோது அவரிடமிருந்து எனக்கு நிறைய உத்வேகம் கிடைத்தது. அடுத்தப் போட்டியில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன். 50 ஓவர்களும் களத்தில் நிலைத்து நின்று விளையாட முயல்வேன். எவ்வளவு அதிக ரன்கள் குவிக்கிறேனோ, அணிக்கு அவ்வளவு சாதகம் தான்" என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


