முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிக்கு கீதா போகத் தேர்வு

புதன்கிழமை, 8 ஜூலை 2015      விளையாட்டு
Image Unavailable

லக்னோ: பிரபல குத்துச்சண்டை வீராங்கனை கீதா போகத் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு தேர்வாகியுள்ளார். வரும் செப்டம்பர் மாதம் 7ம் தேதி முதல் 12ம் தேதி வரை அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளது. அந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் இந்திய வீராங்கனைகளை தேர்வு செய்யும் தகுதிப் போட்டி உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள எஸ்.ஏ.ஐ. பயிற்சி மையத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது.

தகுதிப் போட்டியில் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை கீதா போகத் 58 கிலோ பிரிவில் தன்னுடன் மோதிய சாக்ஷி மாலிக்கை வீழ்த்தி லாஸ் வேகாஸ் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். அவருடன் சேர்த்து வீராங்கனை வினேஷும் தேர்வாகியுள்ளார். 55 கிலோ பிரிவில் லலிதா, 60 கிலோ பிரிவில் சரிதா, 63 கிலோ பிரிவில் அனிதா, 69 கிலோ பிரிவில் நவ்ஜோத், 75 கிலோ பிரிவில் நிக்கி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2010ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டிகளில் பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றவர் கீதா போகத். ஹரியானாவைச் சேர்ந்த அவரின் தந்தை மஹாவீர் சிங் முன்னாள் குத்துச்சண்டை வீரர் ஆவார். அவர் தான் கீதாவின் பயிற்சியாளர். 2012ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான ஒரே இந்திய குத்துச்சண்டை வீராங்கனை கீதா தான். ஆனால் ஒலிம்பிக் போட்டிகளில் அவரால் பதக்கம் வெல்ல முடியவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து