எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லண்டன் - விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் அரையிறுதிச் சுற்றுக்கு இந்திய-சுவிஸ் இணையான சானியா மிர்சா-மார்டினா ஹிங்கிஸ் ஜோடி முன்னேறியது. காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய-கஜகஸ்தான் ஜோடியான கேஸி டெல்லக்வா- யாரஸ்லாவா ஷ்வெடோவா ஜோடியை 7-5, 6-3 என்ற நெர் செட்களில் ஒரு மணி நேரம் 19 நிமிடங்களில் வீழ்த்தியது சானியா-ஹிங்கிஸ் ஜோடி. 2011 விம்பிள்டன் அரையிறுதியில் சானியா-எலெனா வெஸ்னின ஜோடி நுழைந்தது. அதன் பிறகு தற்போது மார்டினா ஹிங்கிஸுடன் விளையாடி அரையிறுதி கண்டுள்ளார் சானியா.
முதல் செட்டில் டெல்லக்வா-ஷ்வெடோவா ஜோடி சானியா-ஹிங்கிஸ் சர்வை முறியடித்தாலும் மீண்டும் சானியா-ஹிங்கிஸ் ஜோடி இருமுறை அவர்களது சர்வை முறியடித்து முதல் செட்டை 7-5 என்று கைப்பற்றினர். 2-வது செட்டில் ஒரேயொரு எதிரணி சர்வை உடைத்த சானியா-ஹிங்கிஸ், அதன் பிறகு டெல்லக்வா-ஷ்வெடோவாவின் டபுள் ஃபால்ட்டினால் 2-வது செட்டை 6-3 என்று கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினர். அரையிறுதியில் 5-ம் தரவரிசையில் உள்ள அமெரிக்க ஜோடியான ராகெல் காப்ஸ்-அபிகெய்ல் ஸ்பியர்ஸ் ஜோடியை எதிர்கொள்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


