முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தானில் 16ம் தேதி ராகுல் பாதயாத்திரை

சனிக்கிழமை, 11 ஜூலை 2015      அரசியல்
Image Unavailable

ஜெயப்பூர், ராஜஸ்தானில் வருகிற 16ம் தேதி ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார்.

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வின் போது மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினார். இதையொட்டி நாடு முழுவதும் உள்ள விவசாயிகளை நேரில் சந்திப்பதற்காக பஞ்சாப், அரியானா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, உள்ளிட்ட மாநிலங்களில் பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டார். இதற்கு ராகுல் காந்திக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவு கிடைத்தது.

இதை தொடர்ந்து மேலும் சில மாநிலங்களில் நடைபயணம் மேற்கொண்டு விவசாயிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதில் வருகிற 16ம் தேதி ராஜஸ்தானில் நடைபயணம் மேற்கொண்டு விவசாயிகளை சந்திக்கிறார். இது குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் சச்சின் பைலட் கூறுகையில்,

வரும் 16ம் தேதி தொடங்கி இரண்டு நாள் பயணத்தின்போது முதல்நாளில் ஹனு மன்கர்பகுதியில் விவசாயிகளை சந்தித்து பேச உள்ளார். இரண்டாம் நாள் பயணத்தின்போது தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள பிர்லா ஆடிட்டோரியத்தில் அனைத்து மாவட்ட கிராம பஞ்சாயத்துகளை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசவுள்ளார் என்றார். தற்போது லலித் மோடி விவகாரத்தில் முதல்வர் வசுந்தரா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் ராஜஸ்தானில் போராட்டம் நடத்தி வரும் வேளையில் ராகுல்காந்தியின் பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து