முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆயத விவகாரம்: அமெரிக்கா மீது நைஜீரிய அதிபர் குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 23 ஜூலை 2015      உலகம்
Image Unavailable

அபுஜா - நைஜீரியாவுக்கு ஆயுதங்களைத் தர மறுப்பதன் மூலம் அமெரிக்கா, போகோ ஹராம் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு உதவுவதாகவும் துணைபோவதாகவும் அந்நாட்டின் அதிபர் குற்றம்சாட்டியுள்ளார். நைஜீரியாவின் அதிபர் முஹம்மது புஹாரி கடந்த திங்கட்கிழமையன்று, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது கூடுதல் உதவிகளை அவரிடம் கேட்டார். அமெரிக்கச் சட்டப்படி, எந்த ஒரு நாடு மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதற்கு தகுந்த ஆதாரங்கள் இருக்கிறதோ, அதற்கு ஆயுதங்கள் வழங்க முடியாது. அமெரிக்கா, நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் செயல்படுவதாக புஹாரி குற்றம்சாட்டியிருக்கிறார்.

நைஜீரியாவில் செயல்பட்டுவரும் போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு 2009லிருந்து இதுவரை 10,000க்கும் மேற்பட்டவர்களைக் கொலை செய்திருக்கிறது. நூற்றுக்கணக்கான பெண்களையும் பெண் குழந்தைகளையும் கடத்தியிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து