முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏழைப்பெண்களுக்கு அரசு செலவில் குறுகிய கால தொழிற்பயிற்சி

வெள்ளிக்கிழமை, 31 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

செனனை, ஏழை பெண்களுக்கு ஒரு மாதம் முதல் 12 மாதங்கள் வரை குறுகிய கால தொழிற்பயிற்சி அரசு செலவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறி்ப்பு

ஊரக வளர்ச்சித்துறையின் கீழ், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பின்படி, செயல்படுத்தப்படவுள்ள ஏழை மகளிரை குடும்பத்தலைவியாக கொண்டுள்ள,குடும்பங்களுக்கான புதிய சிறப்பு வாழ்வாதார திட்டத்தின் கீழ், சென்னை மாவட்டத்தில், மகளிரைகுடும்பத்தலைவியாக கொண்டுள்ள ஏழ்மைநிலை குடும்பங்களைக் கண்டறிந்து, 18 – 45 வயதுவரையிலான குடும்பத்தலைவி அல்லது அவர்தம் மணமாகாத மகள் / மகனுக்கு, அரசு மற்றும் அரசுபதிவு பெற்ற நிறுவனங்கள் மூலம் தையற் பயிற்சி, சில்லரை வணிகம், நோயாளிகள் பராமரிப்பு,அழகுக்கலை, கணினிப் பயிற்சி, மின்பொருட்கள் பழுது பயிற்சி, தோல் பொருட்கள் தயாரிப்பு,இலகுவகை வாகனங்கள் ஓட்டுதல், செயற்கை ஆபரணங்கள் தயாரிப்பு போன்ற ஒருமாதம் முதல்பன்னிரெண்டு மாதம் வரையிலான பல்வேறு குறுகிய கால தொழிற்பயிற்சிகள், அரசு செலவில்அளிக்கப்படவுள்ளன. இது வேலைவாய்ப்புடனான தொழிற்பயிற்சிஎன்பதால், அவர்களின்வாழ்வாதாரம் மேம்பட வழி கோலும்.

எனவே, சென்னை மாவட்டத்தில் மகளிரை குடும்பத்தலைவியாக கொண்டவர்கள் (குறிப்பாககணவனால் கைவிடப்பட்டோர், விதவை, ஆதரவற்றோர், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளோர்)கீழ்க்காணும் முகவரியில் ஆகஸ்ட் 3 முதல் 20 வரையிலான, வேலை நாட்களில் காலை 10.00 மணிமுதல் மாலை 5.45 வரை, இப்பயிற்சி குறித்து தொடர்பு கொள்ளுமாறும், தங்களது பெயரை பதிவுசெய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உரிய ஆவணங்களான குடும்ப அட்டை,வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை, கல்வித்தகுதி சான்றுகளுடன்பதிவிற்கு அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

திட்ட அலுவலர்,தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்,திட்ட செயலாக்க அலகு, முதல் மாடி,100, அண்ணா சாலை (ஸ்பிக் கட்டிடம் அருகில்)கிண்டி, சென்னை – 32.தொலைபேசி – 2235 0636, கைபேசி – 9445034102/104/105தொழிற்பயிற்சியில் பங்குபெற விருப்பமுடையவர்கள் நேரிலோ, தொலைபேசியிலோ,குறுஞ்செய்தி மூலமாகவோ,மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொண்டு விவரங்களை பெற்று,தொழிற்பயிற்சியின் மூலம் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து