முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூமியை போன்ற 3 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு

செவ்வாய்க்கிழமை, 4 ஆகஸ்ட் 2015      உலகம்
Image Unavailable

மேட்ரிட்(ஸ்பெயின்),ஆக.-4, பூமியை போலவே 21 ஒளி ஆண்டுகள் தூரத்தில் 3 கிரகங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பூமியை போலவே உயிர்கள் வாழக்கூடிய வேறு கிரகங்கள் உள்ளனவா என்ற ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டிருக்கும் நிலையில் பூமியிலிருந்து 21 ஒளி ஆண்டுகள் தூரத்தில் மேலும் 3 கிரகங்கள் உள்ளதை அதிநவீன தொலைநோக்கி மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித் துள்ளனர். அதற்கு ‘எச்டி 219134’ என்று பெயர் வைத்துள்ளனர்.

சூரியனை பூமி உட்பட கிரகங்கள் சுற்றி வருவது போலவே மிகப்பெரிய நட்சத்திரம் ஒன்றை இந்த 3 புதிய கிரகங்களும் நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த 3 கிரகங்களும் அவை சுற்றி வரும் நட்சத்திரத்தில் இருந்து சரியான தூரத்தில் அமைந்துள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது பூமி சூரியனிடமிருந்து அமைந்துள்ள தூரத்தை போன்றே உள்ளது.அதனால், அங்கு மனிதர்கள் உயிர்வாழ்வதற்கான காற்று, நீர் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று நம்புகின்றனர். மேலும், பூமியை போன்றே மேற்பரப்பும் அடர்த்தியும் காணப்படுகிறது. மிகுந்த வெளிச்சத்துடன் உள்ள இந்த கிரகங்களை இரவில் வெறும் கண்களாலேயே காண முடியும் என்கின்றனர்.

ஸ்பெயினில் உள்ள தீவில் அமைக்கப்பட்டுள்ள ‘ஹார்ப்ஸ் -என்’ என்ற அதிநவீன தொலை நோக்கி மூலம் இந்த 3 கிரகங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்