முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய ஜிம்னாஸ்டிக் : தீபா கர்மாகர் வெண்கலம் வென்றார்

செவ்வாய்க்கிழமை, 4 ஆகஸ்ட் 2015      விளையாட்டு
Image Unavailable

ஹிரோஷிமா(ஜப்பான்) - 6-வது சீனியர் ஏஆர்டி ஆசிய ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் வெண்கலப் பதக்கம் வென்றார்.  ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் மகளிர் வால்ட் பிரிவில் தீபா கர்மாகர் 14.725 புள்ளிகளைப் பெற்று வெண்கலம் வென்றார். இதேபிரிவில் சீனாவின் யான் வாங் 14.988 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும், ஜப்பானின் சாயி மியாகாவா 14.812 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.  இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இந்தியாவின் பதக்க வேட்டையை தீபா கர்மாகர் தொடங்கி வைத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்