முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் 5 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி போட்டியிடும்: லாலு பிரசாத்

ஞாயிற்றுக்கிழமை, 30 ஆகஸ்ட் 2015      இந்தியா
Image Unavailable

பாட்னா: பீகார் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி 5 தொகுதிகளில் போட்டியிடும் என ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத்  அறிவித்தார்.  இதுதொடர்பாக அவர் பாட்னா வில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பீகார் மாநிலத்தில் போட்டியிட சமாஜ்வாதி கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கியுள்ளோம். மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை இணைந்துள்ள மெகா கூட்டணியில் இப்போது சமாஜ்வாதி கட்சியும் அங்கம் வகிக்கிறது” என்றார்.

மெகா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கான தொகுதிப்பங்கீடு விவரத்தை லாலு,பீகார்முதல்வர் நிதிஷ் குமார், காங்கிரஸ் மூத்த தலைவர் சி.பி.ஜோஷி ஆகியோர் ஏற்கெனவே அறிவித்தனர்.  மொத்தம் உள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை தலா 100 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. எஞ்சிய 3 தொகுதிகளை தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் 3 தொகுதிகள் ஒதுக்கப் பட்டதில் அதிருப்தி அடைந்த தேசியவாத காங்கிரஸ், கூட்டணி யில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்