முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் நடந்த பொது வேலை நிறுதத்தால் ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு

வியாழக்கிழமை, 3 செப்டம்பர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - மத்திய தொழிற்சங்கங்கள் புதன்கிழமை நடத்திய நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தால் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.இந்த வேலை நிறுத்தத்தால், ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொழிலாளர் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்களை வாபஸ் பெற வேண்டும், மாதம் ரூ.15 ஆயிரம் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க வேண்டும், அரசு வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது, பொதுத் துறை நிறுவன பங்குகளை விற்க கூடாது போன்ற 12 கோரிக்கைகளை மத்திய தொழிற்சங்கங்கள் முன்வைத்தன. கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தன. இதையடுத்து, தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கடந்த மாதம் மத்திய அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், எந்த முடிவும் ஏற்படாததால், திட்டமிட்டபடி புதன்கிழமை நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடந்தது. இதில் 10 மத்திய தொழிற்சங்கங்களை சேர்ந்த 15 கோடி தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து ஏஐடியுசி தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா கூறும்போது, ‘‘நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்துக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. இதற்கு முன்பு இப்படி ஒரு ஆதரவு இருந்ததில்லை. டெல்லியில் வேலை நிறுத்தத்தில் பாதிப்பை பார்க்கிறோம். இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை’’ என்றார். மத்திய தொழிற்சங்கங்கள் நடத்திய பொது வேலை நிறுத்தத்தால், ஒரு நாள் மட்டும் ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக அசோசெம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அசோசெம் பொதுச் செயலாளர் டி.எஸ்.ராவத் நேற்று கூறுகையில், அடிப்படை சேவைகள், பண பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டதால், நேரடியாகவும் மறைமுகமாகவும் ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கும். தொழிலாளர் துறையில் சீர்திருத்தங்கள் மிகவும் அவசியம். இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு எல்லோரும் ஏற்கத்தக்க தீர்வை காண வேண்டும். தொழிற்துறை மற்றும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்