முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹேடின் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு

புதன்கிழமை, 9 செப்டம்பர் 2015      விளையாட்டு
Image Unavailable

மெல்பா்ன்: ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் மற்றும் உள்நாட்டு முதல்தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார். அவருக்கு வயது 37. மேலும் இவருடைய மகளின்  உடல் நல பிரச்சினையால் ஆஷஸ் தொடரில் சரிவர பங்கேற்க முடியவில்லை. 30-வது வயதில்தான் ஆஸ்திரேலிய சர்வதேச அணியில் அவரால் நுழைய முடிந்தது.

இந்நிலையில் ஆஷஸ் தொடரில் ஏற்பட்ட தோல்வி காரணமாகவும் புதிய டெஸ்ட் விக்கெட் கீப்பர் பீட்டர் நெவில் சிறப்பாக செயல்பட்டு வருவதாலும் இனி டெஸ்ட் போட்டி வாய்ப்பு கிடைக்காது என்ற காரணத்தினாலும் பிராட் ஹேடின் ஓய்வு அறிவித்ததாக தெரிகிறது. 66 டெஸ்ட் போட்டிகளில் 3,266 ரன்களை 32.98 என்ற சராசரியில் எடுத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 169. 4 சதங்கள் மற்றும் 18 அரை சதங்களை எடுத்துள்ள ஹேடின் 262 கேட்ச்களை பிடித்ததோடு, 8 ஸ்டம்பிங்குகளையும் செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்