முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியா தீவிரவாதிகள் மீது கடற்படைத் தாக்குதலையும் துவக்கியது ரஷ்யா

வியாழக்கிழமை, 8 அக்டோபர் 2015      உலகம்
Image Unavailable

மாஸ்கோ: சிரியா தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதலோடு கடற்படையையும் சேர்த்துத் தாக்கத் துவக்கியுள்ளது ரஷ்யா ராணுவத்தினர். சிரியாவில் அதிபர் அசாத் அரசாங்கத்துக்கு ஆதரவாக கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஐ.எஸ். குழு மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்திவருகிறது. அதிபர் அசாத் எதிர்த்து போராடும் கிளர்ச்சி படையினருக்கு நேட்டோ நாடுகள் ஆதரவளித்து வருகின்றன. இதுவரை வான் வழியாக ஐஎஸ் தீவிரவாதிகளின் இருப்பிடங்களை குண்டு வீசி தாக்கி வந்த ரஷ்யா, தற்போது போர்க்கப்பல்களையும் களத்தில் இறக்கியுள்ளது.

கஸ்பியன் கடல் பகுதியில் இதற்கென நான்கு போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டு, 11 இலக்குகளை நோக்கி 26 ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியிருப்பதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு தெரிவித்துள்ளார். இந்த இலக்குகள் அனைத்தும் சுமார் 1500 கிமீ தொலைவில் இருந்தவை என்றும், தாக்குதலில் திட்டமிட்டபடி இலக்குகள் அனைத்தும் தகர்க்கப்பட்டதாகவும், இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் யாருக்கும் காயமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே, சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கெதிரான வான் தாக்குதலில் 23 ரஷ்ய போர் விமானங்கள் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அவை தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை 112 இலக்குகளை ரஷ்ய போர்விமானங்கள் குண்டு வீசித் தாக்கியுள்ளதாகவும், தீவிரவாதிகளின் 19 தலைமையிடங்களை அழித்துள்ளதாகவும் சோஷி தெரிவித்துள்ளார். அதேபோல 12 ஆயுதக் கிட்டங்கிகளையும் ரஷ்ய போர்விமானங்கள் தாக்கி அழித்துள்ளன.

இவை தவிர 71 கவச வாகனங்களையும் ரஷ்யப் படைகள் அழித்துள்ளன. பல ஆயுதத் தொழிற்சாலைகளையும் ரஷ்யப் படைகள் அழித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் சிரிய ராணுவத்துடன் இணைந்து ரஷ்ய ராணுவமும் தாக்குதல் நடத்த தற்போது ஆயத்தமாகி வருகிறதாம் ரஷ்யா. இது நடந்தால் மூன்று முனைத் தாக்குதலில் சிக்கி தீவிரவாதிகள் நிலைகுலைவார்கள் என்று கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்