முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரதட்சணை புகார் வழக்கில் பெண் சாமியார் ராதே மாவுக்கு முன்ஜாமீன்

வெள்ளிக்கிழமை, 9 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

மும்பை - வரதட்சணை கொடுமை புகாரில் பெண் சாமியார் ராதேமாவுக்கு முன்ஜாமீன் வாங்கியது மும்பை உயர் நீதிமன்றம்.  மும்பையை சேர்ந்தவர் பெண் சாமியார் ராதேமா. இவர் தன்னுடைய கணவரின் வீட்டாரை தூண்டிவிட்டு தன்னை வரதட்சணை கொடுமைக்கு உட்படுத்துவதாக கூறி 32 வயது இல்லத்தரசி ஒருவர் காந்திவிலி காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.  இந்த வழக்கில், ராதேமா தரப்பில் முன்ஜாமீன் கோரி மும்பை செசன்சு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த மனுவை பரிசீலித்த நீதிபதி ரேவதி மொகிதே தியரே, ராதேமாவுக்கு முன்ஜாமீன் அளித்து உத்தரவிட்டார். வரதட்சணை கொடுமை வழக்கில் முன்ஜாமீன்  பெற்ற அவர் தற்பொழுது லண்டனில் உள்ள சூதாட்ட கிளப்பில் நடனம் ஆடியபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராதே மா சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சூதாட்ட கிளப் ஒன்றில் நடனமாடியபோது எடுத்த வீடியோ செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு கிடைத்துள்ளது.முன்னதாக ராதே மா சிவப்பு நிற மினிஸ்கர்ட்டில் இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அவர் கூறுகையில்,பக்தர்கள் ஆசைப்பட்டார்கள் அதனால் தான் மேற்கத்திய உடை அணிந்தேன். அவர்களே விரும்பி எனக்கு அவ்வளவு மேக்கப் போட்டுவிட்டனர். பக்தர்களின் ஆசைக்காக தான் நான் அப்படி உடை அணிந்தேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்