முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-தெ. ஆப்ரிக்கா 3-வது ஒரு நாள் போட்டி: மிரட்டல் விடுத்த ஹர்திக் பட்டேல் கைது

ஞாயிற்றுக்கிழமை, 18 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

ராஜ்கோட்: இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டி எந்த அசம்பாவிதமும் இல்லாமல் நடக்கும் பொருட்டு போலீசார் பட்டேல் சமூகத் தலைவர் ஹர்திக் பட்டேலை கைது செய்தனர். குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி பட்டேல் சமூக தலைவர் ஹர்திக் பட்டேல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டி நேற்று குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட்டில் நடந்தது.

பட்டேல் சமூக போராட்டத்திற்கு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்க ராஜ்கோட் மைதானத்திற்கு வந்து இரு அணி வீரர்களையும் முற்றுகையிடப் போவதாக ஹர்திக் பட்டேல் மிரட்டல் விடுத்திருந்தார். இதையடுத்து மைதானத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் ஹர்திக் பட்டேலை கைது செய்துள்ளனர். ஹர்திக் பட்டேல் ஸ்டேடியத்திற்கு 5 கிலோமீட்டர் தொலைவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago