முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.எஸ்.எஸ் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கோர சுப்ரீம் கோர்ட் ஆலோசனை : ராகுல் ஏற்க மறுப்பு

வியாழக்கிழமை, 26 நவம்பர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்படுவதற்கு  ஆர்.எஸ் .எஸ் அமைப்புதான் காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல்  காந்தி கூறியிருந்தார். இவ்வாறு கூறியதற்கு அவர் மன்னிப்பு கேட்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் கூறியதை ஏற்க ராகுல் காந்தி நேற்று மறுத்தார்.

மகாத்மா காந்தியை சுட்டுக் கொல்வதற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பே காரணம் என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.அவரின் இந்த கருத்தை எதிர்த்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அவர் மீது சுப்ரீம் கோர்ட்டில்  அவதூறு வழக்கை தொடர்ந்தது-.இந்த வழக் கை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்லா சி பந்த் ஆகியோரைக் கொண்ட அமர்வாயம் விசாரணை செய்தது-

இந்த வழக்கினை முடிப்பதற்கு ஆர்.எஸ்.எஸ் குறித்து ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு அவர் மன்னிப்பு கோரலாம் என்று  உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது . இவ்வழக்கினை ஆர்.எஸ்.எஸ் சார்பில் வழக்கறிஞர் ராஜேஷ் குந்தே ஆஜராகி வாதாடி வருகிறார். இந்த வழக் கை முடிப்பதற்கு ராகுல் காந்தி கூறியபடி தனது கருத்துக்கு ராகுல் வருத்தம் தெரிவிக்கலாம் என நீதிமன்ற அமர்வாயம் கருத்து தெரிவித்து இருந்தது. சுப்ரீம் கோர்ட்டின் இந்தகருத்தை  தன்னால் ஏற்க முடியாது என்று ராகுல்  காந்தி கூறினார்.

இந்த வழக்கில் ராகுல் காந்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் நீதிமன்றத்தின் கருத்தை ஏற்க மறுத்தார்.இவ்வழக்கில் தொடர்ந்து வாதாடவே தான் விரும்புவதாகஅவர் கூறினார். ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கு உள் நோக்கம் கொண்டது . தவறானது. எனவே அந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கபில் சிபல் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்