முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2015-ல் இலங்கை மக்கள் கூகுளில் அதிகம் தேடிய நடிகர் விஜய்

ஞாயிற்றுக்கிழமை, 27 டிசம்பர் 2015      சினிமா
Image Unavailable

சென்னை: இந்த ஆண்டில் இலங்கை மக்கள் அதிகம் தேடிய நடிகர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் நடிகர் விஜய். ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் கூகுளில் அதிகம் தேடியவர்கள் பட்டியலை அந்நிறுவனம் வெளியிடும். அதே போல இந்த வருடமும் கூகுள் நிறுவனம் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் உலகளவில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் நடிகை கிம் கர்தாஷியன் முதலிடம் பெற்று இருக்கிறார். உலகில் உள்ள அதிகமான நாடுகளில் கிம் கர்தாஷியனை அவரது ரசிகர்கள் போட்டி போட்டு தேடியுள்ளனர்.

கிம்முக்கு அடுத்த இடத்தில் கால்பந்து வீரர் மெஸ்ஸி இடம் பிடித்து இருக்கிறார். இந்தியாவில் இருந்து நடிகர் சல்மான்கான், நடிகை காத்ரீனா கைப் மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் இடம்பிடித்து இருக்கின்றனர். இந்தியா, பூடான் மற்றும் ஃபிஜி போன்ற நாடுகளில் சல்மான்கானை ரசிகர்கள் அதிகம் தேடியிருக்கின்றனர். இதே போல வங்கதேசம், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் நடிகை கத்ரீனாவை அதிகம் தேடி இருக்கின்றனர்.

இந்த வரிசையில் நடிகர் விஜய்யும் இடம்பிடித்து இருக்கிறார். விஜய்யை இலங்கை மக்கள் அதிகம் தேடி இருப்பதாக கூகுள் நிறுவனம் தகவல் வெளியிட்டு இருக்கிறது.இதன் மூலம் இந்தியா தவிர்த்து வெளிநாடுகளிலும் விஜய்யின் புகழ் அதிகரித்து இருப்பதாக அவரது ரசிகர்கள் தற்போது இதனைக் கொண்டாடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்