முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீப் பாடல் விவகாரம்: சிம்புவுக்கு கூடுதல் அவகாசம்!

திங்கட்கிழமை, 11 ஜனவரி 2016      சினிமா
Image Unavailable

சென்னை - காவல் துறை முன்பு ஆஜராக சிம்புவுக்கு ஜனவரி 29 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.பெண்களை அவதூறு செய்யும் வகையில் "பீப்' பாடல் இருப்பதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் அளித்த புகாரின்பேரில் நடிகர் சிம்பு, இசை அமைப்பாளர் அனிருத் ஆகிய இருவர் மீது கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதேபோல், தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி அளித்த புகாரின்பேரில், சென்னையிலும் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

இந்த வழக்குகளில் முன்ஜாமீன் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சிம்பு மனுக்களைத் தாக்கல் செய்தார். இதன்பிறகு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் தொடர்புடைய கீழமை நீதிமன்றத்தை அணுகி, ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யலாம். அவ்வாறு, தாக்கல் செய்யப்படும் மனுவை தொடர்புடைய நீதிமன்றம், சட்டப்படி பரிசீலித்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். மேலும், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் ஜனவரி 11 அன்று விசாரணைக்காக சிம்பு நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில், காவல் நிலையத்தில் நேரில் ஆஜராவதற்கு காலஅவகாசம் கோரி சிம்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், ஜனவரி 29-ம் தேதிக்குள் கோவை ரேஸ் கோர்ஸ், சென்னை மத்தியக் குற்றப் பிரிவு ஆகிய காவல்துறை அலுவலகங்களில் ஆஜராகவேண்டும் என்று சிம்புவுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்