முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத்தில் நடிகர் ஷாருக்கான் கார் மீது கல்வீசியதால் பரபரப்பு

ஞாயிற்றுக்கிழமை, 14 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

அகமதாபாத் : நடிகர் ஷாருக்கானின் கார் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இந்த கல்வீச்சுச் சம்பவம் நேற்று காலை நடந்தது. இருப்பினும் சம்பவத்தின் போது ஷாருக் கான் காரில் பயணிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. அடையாளம் தெரியாத சிலர் திடீரென ஷாருக் கான் கார் மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்கியுள்ளனர். அவர்களைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

ரயீஸ் என்ற படத்தின் ஷூட்டிங்கில் தற்போது ஷாருக் கான் பிசியாக உள்ளார். அதில் சில காட்சிகளை குஜராத்தில் படமாக்குகின்றனர். இதற்காக குஜராத் வந்துள்ளார் ஷாருக். சகிப்புத்தன்மை விவகாரம் தொடர்பாக முன்பு கருத்து தெரிவித்திருந்தார் ஷாருக் கான். அது முதலே அவருக்கு எதிராக சிலர் தொடர்ந்து கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். போராட்டங்களையும் நடத்தியுள்ளனர். குறிப்பாக சிவசேனா கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். மேலும் பாஜகவினரும் கூட போராட்டங்களை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் பாஜக ஆட்சியின் கீழ் உள்ள குஜராத்தில் ஷாருக் கான் கார் தாக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்