முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீக்கிய குருத்வாரா குண்டுவெடிப்பு: கைது செய்யப்பட்ட சிறுவர்களுக்கு தடுப்புக்காவல்

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2016      உலகம்
Image Unavailable

பெர்லின்  - ஜெர்மனியின் எஸ்சென் நகரில் அமைந்துள்ள சீக்கிய குருத்வாரா குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஜெர்மனி போலீசார் 16 வயதுடைய இரண்டு சிறுவர்களை கைது செய்துள்ளனர்.    ஜெர்மனியின் எஸ்சென் நகரில் அமைந்துள்ள சீக்கிய குருத்வாரா ஒன்றில் கடந்த 16-ந்தேதி குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 3 பேர் பலத்த காயமடைந்தனர். சீக்கியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக ஜெர்மனி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த தகவல்களை போலீசார் ஆய்வு செய்தபோது, சம்பவத்துக்கு முன் 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் ஒரு பையுடன் அந்த பகுதியில் வந்திருப்பதை கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் எஸ்சென் மற்றும் அருகில் உள்ள ஜெல்சென்கிர்சன் பகுதிகளில் வைத்து கடந்த வாரம் போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் முகமது பி என்றும், மற்றொருவர் யூசுப் டி எனவும் தெரிய வந்தது. இதில் முகமது பி சம்பவத்துக்கு முன்தினம் அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் நடந்த திருட்டு முயற்சி வழக்கிலும் கைது செய்யப்பட்டார்.

அவர்கள் இருவரையும் தடுப்புக்காவலில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு உண்டா? என விசாரித்து வருவதாகவும், கைது செய்யப்பட்ட முகமது பி அடிக்கடி குற்றங்களில் ஈடுபட்டு கைது செய்யப்படும் தொடர் குற்றவாளி எனவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்