முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல் 30-வது லீக் போட்டி: கோலி, காம்பீருக்கு அபராதம்

புதன்கிழமை, 4 மே 2016      விளையாட்டு
Image Unavailable

பெங்களூரு : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐ.பி.எல். 30-வது லீக் போட்டியில் பெங்களூர் அணி மெதுவாக பந்து வீசியதற்காக அந்த அணி கேப்டன் விராட் கோலிக்கு ரூ.24 லட்சம் அபராதமும், வெற்றி கொண்டாட்டத்தின்போது சேர்களை எட்டி உதைத்தாக காம்பீருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் பெங்களூரில் திங்கட்கிழமை நடந்தது. இதில் கொல்கத்தா 5 விக்கெட்டில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணி மெதுவாக பந்து வீசியதற்காக அந்த அணி கேப்டன் விராட் கோலிக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மெதுவாக பந்துவீசிய குற்றச்சாட்டில் அவருக்கு அபராதம் விதிக்கப்படுவது 2-வது முறையாகும். ஏற்கனவே அவருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது. இதன்மூலம் அவர் இதுவரை ரூ.36 லட்சத்தை இழந்து உள்ளார். 3-வது முறையாக மெதுவாக பந்து வீசிய குற்றச்சாட்டில் சிக்கலால் கோலிக்கு ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்படும். இந்த குற்றச்சாட்டில் பெங்களூர் அணி வீரர்களுக்கு தலா ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல இந்த போட்டியில் வெற்றி கொண்டாட்டத்தின்போது கொல்கத்தா கேப்டன் காம்பீர் சேர்களை எட்டி உதைத்தார். இதற்காக அவருக்கு போட்டியில் பெறும் பணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்