முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்னால் வாக்களிக்க வர முடியவில்லை மன்னித்து விடுங்கள்: நடிகர் சூர்யா

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2016      சினிமா
Image Unavailable

சென்னை : இன்று நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் 100% வாக்கினைப் பதிவு செய்திட தேர்தல் ஆணையம் பல்வேறு வழிகளிலும் முயற்சித்து வருகிறது.இந்த விழிப்புணர்வு விளம்பரத்தில் நடிகர் சூர்யாவும் நடித்திருந்தார். ஆனால் மற்றவர்களை வாக்களிக்க வலியுறுத்திய சூர்யா தற்போது அமெரிக்காவில் இருப்பதால் அவரால் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்காக தற்போது அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து சூர்யா ''இதுவரை எந்தத் தேர்தலிலும் நான் வாக்களிக்காமல் இருந்தது இல்லை. இந்தமுறை வெளிநாட்டிலிருந்து முதல்நாளே வாக்களிக்க வந்து விடுமாறு பயணத்திட்டம் வகுத்திருந்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக என்னால் வரமுடியாத சூழல் ஏற்பட்டு விட்டது. இதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறியிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்