முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 2 நாள் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

வெள்ளிக்கிழமை, 27 மே 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழகம், புதுச்சேரியில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களில் ஓரிரு இடங்களில் கோடைமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நேற்று  சென்னையில் வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-
தமிழகத்தில் 3 நாட்களுக்கு இயல்பைக் காட்டிலும் 3 டிகிரி வெப்பம் அதிகமாக காணப்படும். தமிழகம், புதுச்சேரியில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கோடைமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் மழை பெய்யும். வெப்பச் சலனம் காரணமாக சாத்தூரில் 5 செ.மீ மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மதுரை, வேலூர் உள்ளிட்ட நகரங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்