முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக டெஸ்ட் போட்டிகளில் பந்து வீச்சாளர் அஸ்வின் 2வது இடம்

செவ்வாய்க்கிழமை, 31 மே 2016      விளையாட்டு
Image Unavailable

துபாய -  உலக டெஸ்ட் போட்டிகளில், இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடத்தையும், இந்திய சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர் இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் போது இந்தியா 9விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு அஸ்வின் பந்து வீச்சு பெரிதும் உதவியது.  இந்த தர பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டு இருக்கிறது.  ஜான்சன் 884புள்ளிகளுடன் முதலிடத்திலும் அஸ்வின்  871 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் இருக்கிறார்கள்.

ஜான்சன்  அஸ்வினைவிட 13 புள்ளிகள் கூடுதலாக எடுத்து முதலிடத்தை பெற்றுள்ளார்.  இந்திய பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா  789புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளார். உலக டெஸ்ட் போட்டிகளில் முதலிடம் பிடித்த 4வது இங்கிலாந்து பந்து வீச்சாளராக ஆண்டர்சன் இருக்கிறார். இதற்கு  முன்னர் இயன் போத்தம்  1980ம் ஆண்டு உலக டெஸ்ட் போட்டியில் முதலிடத்தை முதன் முறையாக பெற்று இங்கிலாந்துக்கு பெருமை சேர்த்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்