முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7 மாவட்ட தலைவர்கள் நீக்கத்துக்கு எதிர்ப்பு: இளங்கோவனை அழைத்து சோனியா விசாரணை

சனிக்கிழமை, 18 ஜூன் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, சட்டசபை தேர்தலில் சரியாக பணியாற்றவில்லை என்று கூறி 7 மாவட்ட தலைவர்களை நீக்கியது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனிடம் சோனியா விசாரித்ததாக கூறப்படுகிறது.

சட்டசபை தேர்தலில் சரியாக பணியாற்றவில்லை என்று கூறி 7 மாவட்ட தலைவர்களை தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் நீக்கினார்.இதற்கு இளங்கோவன் எதிர்ப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உள்பட மூத்த நிர்வாகிகள் பலர் டெல்லி சென்று தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளருமான முகுல் வாஸ்னிக்கிடம் புகார் தெரிவித்தனர்.இந்த நிலையில் மேலிட அவசர அழைப்பின் காரணமாக இளங்கோவன் டெல்லி சென்றுள்ளார்.

அவர் சோனியாவை சந்தித்து பேசினார். அப்போது 7 மாவட்ட தலைவர்கள் நீக்கம் பற்றி சோனியா விசாரித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இளங்கோவனுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறும் போது, இது தவறான தகவல். வேண்டுமென்று வதந்தியை பரப்புகிறார்கள். மாநில தலைவரை டெல்லி மேலிடம் அழைத்து பேசுவது வழக்கமானதுதான். அதேபோல் இந்த சந்திப்பும் வழக்கமானதுதான் என்றார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்