முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோபா அமெரிக்க கால்பந்து : கொலம்பியாவுக்கு 3-வது இடம் அமெரிக்காவை 1-0 கோல் கணக்கில் வீழ்த்தியது

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூன் 2016      விளையாட்டு
Image Unavailable

கிளன்டேல் : கோபா அமெரிக்கா கோப்பை கால்பந்து போட்டியில் கொலம்பியா அணி 1-0கோல் கணக்கில் அமெரிக்காவை தோற்கடித்து 3வது இடத்தை பிடித்தது.

அமெரிக்காவில் கோபா அமெரிக்கா கோப்பைக்கான கால் பந்து போட்டி நடந்து வருகிறது. கிளன் டெல் நகரில் 3வது இடத்திற்கான ஆட்டம் நடந்தது. இந்த ஆட்டத்தில் கொலம்பியா அணியும், அமெரிக்க அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் கொலம்பிய அணி அபாரமாக ஆடி 1-0கோல் கணக்கில் அமெரிக்காவை தோற்கடித்தது. ஆட்டத்தின் 31வதுநிமிடத்தில் அமெரிக்க கோல் கீப்பர் டிம் ஹார்வர்டின் தடுப்பை மீறி கொலம்பிய வீரர் கரோலஸ் பக்கா தலையால் முட்டி கோல் போட்டார். அவரது கோல் கொலம்பிய அணியின்  வெற்றியை உறுதி செய்தது.

3வது இடத்திற்கான ஆட்டத்தில் தோல்வியை தழுவிய அமெரிக்க அணி அரை இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினாவிடம் 4-0கோல்கணக்கில் தோல்வியை தழுவி இருந்தது. அமெரிக்க அணி 31வது தர நிலையில் உள்ள அணியாகும். 16நாடுகள் பங்கேற்கும் கோபா அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டியில் கொலம்பிய அணியிடம் இரண்டாவது முறையாக அமெரிக்கா தோல்வியை தழுவியுள்ளது.

கடந்த 1995ம் ஆண்டு உருகுவேயில் நடந்த ஆட்டத்தில் அமெரிக்க அணி கொலம்பியாவிடம் தோல்வியை தழுவி 4வது இடத்தை பெற்றிருந்தது. அதேப்போன்று தற்போது அந்த அணி இந்த போட்டியில் 4வது இடத்தை பெற்றிருக்கிறது. 3வது இடத்தை கைப்பற்றிய கொலம்பிய அணி 2001ம் ஆண்டு கோபா அமெரிக்கா சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. அந்த அணி இந்த போட்டியில் 4வது முறையாக 3வதுஇடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன்னர் அந்த அணி முதல் முறையாக கடந்த 1995ம் ஆண்டு போட்டியில் 3வது இடத்தை  பிடித்து இருந்தது.

நடப்பு கோபா அமெரிக்கா பந்தயத்தின் இறுதி போட்டி அமெரிக்க நேரப்படி நேற்று நடைபெற்றது . இதில் சாம்பியன் பட்டத்திற்கு அர்ஜென்டினா அணியும், சிலி அணியும் மோதின.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்