முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்கள் குறித்து இழிவான வசனம் : மம்மூட்டிக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

புதன்கிழமை, 20 ஜூலை 2016      சினிமா
Image Unavailable

திருவனந்தபுரம்  - மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி – வரலட்சுமி ஆகியோரது நடிப்பில் கடந்த 6 ந்தேதி வெளிவந்த படம் கசாபா. திரில்லர் படமாக வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை நிதின் ரெஞ்சி பணிக்கர் இயக்க ஆலிஸ் ஜார்ஜ் தயாரித்துள்ளார்.

இந்த் ப்டத்தில் பெண்களை இழிவுபடுத்தும் காட்சி உள்ளதாகவும், கிண்டலடிக்கும் வசனங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தற்போது மகளிர் அமைப்பினர் புகார் தெரிவித்துள்ளனர். இது பற்றி விசாரித்த கேரள மாநில மகளிர் ஆணையம், நடிகர் மம்மூட்டி, இயக்குனர் நிதின், தயாரிப்பாளர் ஆலிஸ் ஜார்ஜ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும், இந்த மகளிர் ஆணையம், மலையாள திரைப்பட நடிகர் சங்கம் மற்றும் மலையாள திரைப்படங்களில் வல்லுநர் சங்கம் ஆகியோருக்கு திரைப்பட சான்றிதழ் வழங்குவது தொடர்பாக, பெண்களை இழிவுபடுத்தும் வசனங்கள், கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் நீக்கிவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்