முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஏற்று மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க தலைவர் பதவியிருந்து சரத்பவார் விலகல்

ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூலை 2016      இந்தியா
Image Unavailable

மும்பை : கிரிக்கெட் சங்கங்களில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதவி வகிக்க கூடாது. இந்திய கிரிக்கெட் வாரியத்திலும் சீரமைப்பு மேற் கொள்ளப்பட வேண்டும் . 9ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட் நிர்வாகிகள் பதவி வகிக்கக்கூடாது என லோதா கமிட்டி அளித்த பரிந்துரைகளை ஏற்ற சுப்ரீம் கோர்ட்  அதனை கிரிக்கெட் சங்கங்கள்  நிறைவேற்ற வேண்டும் என தீர்ப்பளித்தது . இதன் படி மகாராஷ்டிரா  கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் அந்த பதவியில் இருந்து 6 மாதத்தில் விலகுகிறார். தான் பதவி விலகும் தகவலை, மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் முடிந்ததும் சரத் பவார்  தெரிவித்தார்.

75வயது சரத் பவார் தற்போது மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக மட்டுமல்லாமல்   இந்திய கிரிக் கெட் வாரியம் மற்றும் சர்வ தேச கிரிக்கெட் கவுன்சிலில் தலைமை பொறுப்பில் இருந்துள்ளார். மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை நிறைவேற்ற செயல்படுத்த 6 மாதம் ஆகும் . எனவே நான் உடனடியாக பதவி விலக வேண்டியிருக்காது என்றும் பவார் கூறினார்.

நான் நீதித்துறையை மதிக்கிறேன். கிரிக்கெட் நிர்வாக பொறுப்பில் இருந்து விலகுவது குறித்தும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த போதும், மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க தலைவர் பதவியிலும்  பல்வேறு விஷயங்கள் நிறைவேற உதவியுள்ளேன். லோதா கமிட்டி பரிந்துரைகளை நாங்கள் விவாதித்தோம். அந்த பரிந்துரைகளை நாங்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டோம். எனவே தற்போது கிரிக்கெட் நிர்வாக அமைப்பை  மறு சீரமைக்க வேண்டியுள்ளது .இதற்கு 6 மாத காலம் ஆகும் .
 ஒரு மாநிலம் ஒரு வாக்குதான் அளிக்க வேண்டும் என்கிற சுப்ரீம் கோர்ட்டின் முடிவை ஏற்கிறோம். ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் ,மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம், விதர்பா கிரிக்கெட் சங்கம், மும்பை கிரிக்கெட் சங்கம் என 3 சங்கங்கள் உள்ளன என்றும் தேசிய வாத கட்சியின் தலைவரும் கிரிக்கெட் சங்க தலைவராகவும் உள்ள பவார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்