முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேது எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணி தவறவிட்ட ரூ.5 லட்சம் மதிப்புடைய பணம் - நகை மீட்டு ஒப்படைப்பு

செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, சேது எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணி தவறவிட்ட ரூ.5 லட்சம் மதிப்புடைய பணம் - நகை மீட்டு மீண்டும் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஏ.சி.ஜமாலியா. இவர் தனது குடும்பத்தினரோடு ராமேசுவரத்தில் இருந்து சென்னை எழும்பூர் வரும் ‘சேது’ எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏ.சி. முதல்வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார். நேற்று முன்தினம் காலை 8.20 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தின் 7-வது நடைமேடையில் ரெயில் வந்து நின்றதும், ஏ.சி.ஜமாலியா இறங்கி சென்றார். பணம் மற்றும் நகைகள் வைத்திருந்த கைப்பையை ரெயிலில் மறதியாக விட்டுச்சென்றார்.

இதற்கிடையே ரெயிலில் சோதனை செய்த ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் ரெயில் பெட்டியின் உள்ளே கேட்பாரற்று கிடந்த கைப்பையை எடுத்து சோதனை செய்தனர். அதில் கட்டுக்கட்டாக பணம் மற்றும் தங்கம், வைர நகைகள் இருந்தது. இதையடுத்து எழும்பூர் ரெயில்நிலைய மேலாளரிடம் கைப்பையை ஒப்படைத்தனர். இதற்கிடையே கைப்பையை தவறவிட்டதாக ஏ.சி.ஜமாலியா எழும்பூர் ரெயில்வே பாதுகாப்பு படையில் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து சேது எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து மீட்கப்பட்ட கைப்பை ஏ.சி.ஜமாலியா விட்டுச்சென்றதுதான் என்று ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. பின்னர் நகைகள் மற்றும் பணம் இருந்த கைப்பையை ரெயில்வே பாதுகாப்பு படையினர் ஏ.சி.ஜமாலியாவின் மகன் சலீமிடம் ஒப்படைத்தனர். அதில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் ரூ.3½ லட்சம் மதிப்புடைய வைரம் - தங்க நகைகள் இருந்தது. பணம் மற்றும் நகைகளை மீட்டு ஒப்படைத்த ரெயில்வே பாதுகாப்பு படையினரை ஏ.சி.ஜமாலியா மற்றும் அவரது குடும்பத்தினர் பாராட்டினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்