முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய வீரர்கள் இல்லாதது ஒலிம்பிக்குக்கு பாதிப்பு: அதிபர் புதின் பாய்ச்சல்

வியாழக்கிழமை, 28 ஜூலை 2016      உலகம்
Image Unavailable

மாஸ்கோ  - ஒலிம்பிக்கில் பல்வேறு வகையான விளையாட்டுகளில் ரஷியர்கள் பங்கேற்க இயலாத நிலையை ஏற்பட்டு உள்ளதாகவும், இதனால் ஒலிம்பிக் போட்டியின் தரம் குறைந்து பாதிப்பை ஏற்படுத்தும் என ரஷிய அதிபர் புதின் கூறியுள்ளார். ஊக்க மருந்து விவகாரத்தால் 100-க்கும் மேற்பட்ட ரஷிய வீரர், வீராங்கனைகள் பிரேசில் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் தடகள வீரர், வீராங்கனைகள் தான் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளானார்கள். போல்வால்ட் சாதனை மங்கை இசின்பேஎவா, செர்ஜி கபென்கோவா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இதில் அடங்குவார்கள்.

தடகளத்தில் ஒரே ஒரு ரஷியர் மட்டுமே ஒலிம்பிக்கில் பங்கேற்க சர்வதேச தடகள சம்மேளனம் அனுமதி அளித்து உள்ளது. நீளம் தாண்டும் வீராங்கனை டாரியா கிறிஸ்னா மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரஷியாவின் முன்னணி விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் இல்லாதது பிரேசில் ஒலிம்பிக் போட்டிக்கு மிகப்பெரிய பாதிப்பு என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் பாய்ந்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ஒலிம்பிக்கில் பல்வேறு வகையான விளையாட்டுகளில் ரஷியர்கள் பங்கேற்க இயலாத நிலையை ஏற்படுத்தி விட்டார்கள். இதனால் ஒலிம்பிக் போட்டியின் தரம் குறைந்து பாதிப்பை ஏற்படுத்தும். ரஷிய வீரர், வீராங்கனைகளுக்கு தடை விதிக்கப்பட்டது முற்றிலும் பாரபட்சமானது. இவ்வாறு விளாடிமிர் புதின் கூறியுள்ளார். பிரேசில் ஒலிம்பிக் போட்டியில் 23 வகையான விளையாட்டில் 286 ரஷிய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்