முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்

செவ்வாய்க்கிழமை, 7 மே 2024      இந்தியா
Rupees-2

Source: provided

ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் கதிகானா சௌக் பகுதியில் உள்ள மாநில ஊரக வளர்ச்சித்துறையின் அமைச்சரும் பக்குர் பேரவைத் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவுமான ஆலம்கிர் ஆலமின் தனிச் செயலர் சஞ்சீவ் லாலின் வீட்டுப் பணியாளர் ஜஹாங்கீர் அலாம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை நடத்திய சோதனையில் ரூ. 35 கோடி பணத்தை கைப்பற்றினர். மேலும், சஞ்சீவ் குமார் வீட்டில் இருந்து ரூ.10 லட்சம் பணமும், அவரது மனைவியின் கட்டுமான நிறுவனத்தின் கூட்டாளியின் வீட்டில் இருந்து ரூ.2.93 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சஞ்சீவ் குமார் லால், ஜஹாங்கீர் அலாம் ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்த அமலாக்கத்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், அரசு ஒப்பந்ததாரரான ராஜீவ் குமார் சிங் வீட்டில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.5 கோடி பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இவர் மூலம் ரூ.10 கோடிக்கு மேல் கணக்கில் வராத பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

டெண்டர் ஒதுக்குவதற்கு ஒப்பந்தகாரர்களிடம் இருந்து லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைச் சட்டத்தின்கீழ் ஊரக வளர்ச்சித் துறையின் முன்னாள் தலைமை பொறியாளர் வீரேந்திர குமார் ராம் அமலாக்கத்துறையால் கடந்தாண்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் தொடர்ச்சியாக தற்போது அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து, அமைச்சர் ஆலம்கிர் ஆலமிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டு வருவதாகவும், விரைவில் அவருக்கு சம்மன் அனுப்பவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து