முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்ஜினீயரிங் படிப்புக்கான கட்ஆப் மதிப்பெண் குறைகிறது

செவ்வாய்க்கிழமை, 7 மே 2024      தமிழகம்
Engg 2023-07-13

Source: provided

சென்னை : நேற்று முன்தினம் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் இயற்பியல், வேதியியல், பாடங்களில் மிக குறைந்த மாணவர்களே நூற்றுக்கு நூறு எடுத்துள்ளதால் பொறியில் கட்-ஆப் மதிப்பெண் குறைகிறது.

பள்ளி கல்வியில் இறுதி வகுப்பான பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகம் என்றாலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கியவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை ஒப்பிடும் போது குறைவாகும். 

என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு கணித பாடத்துடன் இயற்பியல், வேதியியல் பாடங்களின் மதிப்பெண் முக்கியமாகும். இந்த  3 பாடங்களின்  கூட்டு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது. 

3 பாடங்களில் எடுத்த மதிப்பெண் கணக்கீடு செய்து கட்-ஆப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இயற்பியல், வேதியியல், பாடங்களில் மிக குறைந்த மாணவர்களே நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர். இதனால் பொறியில் கட்-ஆப் மதிப்பெண் குறைகிறது. 

கடந்த ஆண்டு வேதியியல் பாடத்தில் 3909 பேர் முழு மதிப்பெண் பெற்றனர். அதே போல் இயற்பியல் பாடத்தில் 812 பேர் நூற்றுக்கு நூறு பெற்று இருந்தனர். அதனுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு இந்த பாடங்களில் 100-க்கு 100 பெற்றவர்கள் குறைவாகும்.

இயற்பியல் பாடத்தில் 633 பேரும், வேதியியல் பாடத்தில் 471 பேரும் முழு மதிப் பெண் பெற்றுள்ளனர். ஆனால் பொறியியல் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் தொடர்பான பாடப்பிரிவுகளில் 8 ஆயிரம் இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளன. 

இதன் காரணமாக கட்-ஆப் மார்க் குறைய வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் வணிகவியல், பொருளியல் பாடங்களில் அதிகமான மாணவர்கள் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர். வணிகவியலில் 6142 பேரும், பொருளியலில்3299 பேரும் சதம் அடித்ததால் டாப் கலை அறிவியல் கல்லூரிகளில் கட்-ஆப் மார்க் 99-100 வரை உயர வாய்ப்பு உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து