முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இடத்திற்கு தகுதியானவர்கள் நாங்கள்: மிஸ்பா சொல்கிறார்

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2016      விளையாட்டு
Image Unavailable

ரியோ  - டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 இடத்திற்கு நாங்கள் தகுதியானவர்கள் என்று மிஸ்பா உல் ஹக் சொல்கிறார். இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் நேற்று முடிவடைந்த ஓவல் டெஸ்டில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடரை இழக்காமல் 2-2 என சமநிலைப் படுத்தியது. தொடரை இழக்காதததால் இலங்கை- ஆஸ்திரேலியா, இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடரை பொறுத்து பாகிஸ்தான் அணி டெஸ்ட் தர வரிசையில் முதல் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.

நாங்கள் முதல் இடத்திற்கு தகுதியான அணிதான் என்று மிஸ்பா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்., ‘‘நாங்கள் முதல் இடத்திற்கு தகுதியானவர்கள். ஏனென்றால், நாங்கள் கடந்த 6 ஆண்டுகளாக எங்களுடைய சொந்த நாட்டில் விளையாடியது இல்லை. சில நேரம் மக்கள் நாங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் விளையாடு கொண்டிப்பது எளிதானது என்று நினைக்கலாம். ஆடுகளம் எங்களுக்கு ஆதரவு இருக்கிறது. அதனால் நாங்கள் வெற்றி பெறுகிறோம் என்று நினைப்பார்கள்.

ஆனால், சொந்த குடும்பம் மற்றும் நண்பர்கள் ஆகியோரை பிரிந்து ஒவ்வொரு நாட்களும் வெளிநாட்டு மண்ணில் விளையாடுவது மிகவும் கடினமானது. இது மனதளவில் கடினமானது. என்னால் எனது அம்மாவை வருடத்திற்கு ஒருமுறைதான் பார்க்க முடியும். அதேபோல் எனது சகோதரியையும் வருடத்திற்கு ஒருமுறைதான் பார்க்க முடிகிறது. சில நண்பர்களை மூன்று முதல் நான்கு வருடங்களாக பார்க்க முடியவில்லை. ஏனென்றால் அந்த அளவிற்கு வெளிநாட்டு மண்ணில் போட்டிகள் இருக்கிறது.

நாங்கள் எப்போதுமே பாகிஸ்தான் நாட்டை விட்டு வெளியில்தான் இருக்கிறோம். எங்களுக்கு வெளிநாட்டு பயணம் மற்றும் எங்களது சொந்த மைதானம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அதிக போட்டிகள் இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அதன்பின் ஆஸ்திரேலியா. இது எளிதானதல்ல. இருந்தாலும் அணி வெற்றி பெற்று கொண்டிருக்கிறது. தற்போது வரை பாகிஸ்தான் அணி சரியான போட்டி அணியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

ஆசிய கண்டத்தில் சிறப்பாக விளையாடியவர்கள் இங்கிலாந்து மண்ணில் எப்படி விளையாடுவர்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனாலும், எங்களால் இங்கிலாந்து மண்ணிலும் சிறப்பாக விளையாட முடியும் என்பதை ஒரு கட்டத்தில் நாங்கள் தொடரை வென்று விடுவோம் என்ற நிலையில் இருந்த சம்பவம் காண்பித்தது. பாகிஸ்தான் அணி குறித்து நான் உண்மையிலேயே பெருமை அடைகிறேன். இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிவடைந்த பின்னர், பாகிஸ்தான் அணி நம்பர் ஒன் இடத்தை பிடிக்க முடியும் என்றால், நாங்கள் அதற்கு மிகவும் தகுந்த அணி என்று நினைக்கிறேன்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்