முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆங் சான் சூகியுடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு : இருநாட்டு உறவு குறித்து ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 23 ஆகஸ்ட் 2016      உலகம்
Image Unavailable

நைப்பிதாவ்  - மியான்மர் நாட்டில் பயணம் மேற்கொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஆங் சான் சூகியை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேசினார். அக்டோபர் 15-16 தேதிகளில் 8-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு கோவாவில் நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இதனையொட்டி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பிரிக்ஸ் மாநாடு குறித்து ஆலோசனை நடத்த திங்கட்கிழமை  மியான்மர் சென்றார். இந்நிலையில் தனது பயணத்தின் ஒரு பகுதியான மியான்மர் நாட்டின் தேசிய ஆலோசகர் ஆங் சான் சூகியை சுஷ்மா சுவராஜ் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதனை தொடர்ந்து மியான்மர் அதிபர் ஹைதின் கியாவை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான உறவு குறித்து ஆலோசனை நடத்தினார். ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கட்சி ஆட்சிக்கு பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக இந்தியா சார்பில் உயர் மட்ட அளவிலான பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இந்த பயணத்தின் போது சுஷ்மா சுவராஜ் உடன் வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் உட்பட மூத்த அதிகாரிகள் சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்