முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையத்தில் இருந்து 17, 18-ந்தேதி மின்சார ரெயில்கள் இயங்காது

சனிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, கூடுதல் ரெயில் பாதை அமைக்கும் பணியால் சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையத்தில் இருந்து 17, 18-ந்தேதிகளில் மின்சார ரெயில்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ரெயில்வே கோட்ட மேலாளர் அனுபம்சர்மா நேற்று  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையத்தில் 5 மற்றும் 6-வது வழித்தடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இறுதி கட்ட பணிகள் நடைபெறுவதையொட்டி வருகிற (செப்டம்பர்) 17 மற்றும் 18-ந்தேதிகளில் சென்ட்ரலில் இருந்து புறப்படும் மின்சார ரெயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.அதற்கு பதிலாக அங்கிருந்து புறப்படும் ஒருசில ரெயில்கள் கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும். சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையத்தில் 5 மற்றும் 6-வது வழித்தடம் அமைக்க ரூ. 30 கோடி செலவிடப்படுகிறது. புறநகர் ரெயில் நிலையத்தில் இருந்து தினசரி 260 ரெயில்கள் வந்து செல்கின்றன. திருவள்ளூர்- அரக்கோணம் வழித்தடங்களிலும், கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டை வழித்தடங்களிலும் தினசரி 2 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.

பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு கூடுதலாக 5 மற்றும் 6-வது வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் மின்சார ரெயில்கள் காலதாமதமின்றி எளிதில் வந்து செல்லும்.தற்போது புதிய வழித்தடங்களில் சிக்னல்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இவை தவிர சென்ட்ரலில் இருந்து புறப்படும் 17 எக்ஸ்பிரஸ், மெயில் ரெயில்கள் வருகிற 6-ந்தேதி மற்றும் 7-ந்தேதிகளில் பெரம்பூரில் இருந்து புறப்படும். அதன் விவரம்:-

1. ஆலப்புழா-தன்பாத், 2. திருவனந்தபுரம்-கோரக்பூர், 3. திருவனந்தபுரம்- கோர்பா, 4. எர்ணாகுளம் - பராணி, 5. எர்ணாகுளம் - இந்தூர், 6.தன்பாத் - ஆலப்பூழா, 7.சண்டிகார் - மதுரை, 8.கோரக்பூர்- திருவனந்தபுரம், 9.கோர்பா-திருவனந்தபுரம், 10. இந்தூர்-திருவனந்தபுரம், 11. பராணி-எர்ணாகுளம், 12. பாட்னா-எர்ணாகும், 13. சாலிமர்-திருவனந்தபுரம், 14. முசாபர்பூர்-யஷ்வந்த்பூர், 15. கவுகாத்தி-திருவனந்தபுரம், 16. கவுகாத்தி- பெங்களூர், 17. கவுகாத்தி- திருவனந்தபுரம்.இவை தவிர மற்ற ரெயில்கள் சென்ட்ரலில் இருந்து புறப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்