முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானம் தாங்கிய ஐ.என்.எஸ் விராத் போர்க்கப்பல் தனது சேவையில் இருந்து விடைபெறுகிறது

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : இந்திய கடற்படையில் 30 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் விமானம் தாங்கிய ஐ.என்.எஸ் விராத் போர்க்கப்பல், தனது சேவையில் இருந்து விரைவில் விடைபெறவிருக்கிறது.

இங்கிலாந்திடம் இருந்து பெறப்பட்டு, இந்திய கடற்படையில் 1987-ம் ஆண்டு ஈடுபடுத்தப்பட்ட ஐ.என்.எஸ் விராத் போர்க்கப்பல், தொடர்ந்து 30 ஆண்டுகளாக சிறப்பாக வகையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. உலகிலேயே மிக அதிக காலம் கடற்படை சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போர்க்கப்பல் என்ற வகையில், கின்னஸ் சாதனைப் புத்தகத்தின் பக்கங்களில் இதன் பெயர் இடம்பெற்றுள்ளது.

கேரள மாநிலம் கொச்சியில் அண்மையில் இக்கப்பலில் சில சீரமைப்பப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் ஐ.என்.எஸ் விராத் போர்க்கப்பல் மும்பைக்கு கொண்டு செல்லப்பட இருப்பதாகவும், இதனைத் தொடர்ந்து இக்கப்பலின் சேவை நிறைவுவிழா, அடுத்த ஆண்டில் தொடக்கத்தில் நடத்தப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்