முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவிதாங்கூர் கடைசி மன்னர் பிறந்தநாள் சபரிமலை கோவிலில் நடைதிறந்து பூஜை

ஞாயிற்றுக்கிழமை, 30 அக்டோபர் 2016      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம். பிரசித்த பெற்ற சபரி மலை அய்யப்பன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் நடை திறக்கப்பட்டு சுவாமி அய்யப்பனுக்கு விஷேச பூஜைகள் நடத்தப்படும்.

இதே போல் மண்டல பூஜை , மகரவிலக்கு பூஜையின்  போதும் கோவிலில் விஷேச பூஜைகள் நடத்தப்படும். இந்த பூஜைகளின் போது லட்சக்கனக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்வார்கள்.

மேலும் சிறப்பு நிகழ்வாக  அய்யப்பன் கோவிலில் பிரதிஷ்டை தினம் உள்பட சில நிகழ்வுகளுக்காகவும்  கோவில் நடை திறக்கப்படுவது வழக்கம்.  திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கடைசி மன்னர் சித்திரை திருநாள் பாலராமவர்மவின்  பிறந்த நாளையொட்டி நேற்று முன்தினம் சபரிமலைக் கோயில்  நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

சுவாமி அய்யப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.  உதயாஸ்தான பூஜை, படி பூஜை போன்றவையும் நடைபெற்றது.  இதில்  திரலான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்  செய்தனர். பூஜைகளுக்கு பிறகு இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. இதன் பிறகு பிரசித்திபெற்ற மண்டலகால பூஜைக்காக வருகிற 15 ம் தேதி செவ்வாய்கிழமை மாலை 5 மணி்க்கு சபரிமலை சுவாமி அய்யப்பன் கோயில்  நடை திறக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்