மழைக்கால நோய்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

செவ்வாய்க்கிழமை, 22 நவம்பர் 2016      மருத்துவ பூமி
medi-2

மழைக்கால நோய்களில் இருந்து குழந்தைகளையும், பெரிய வர்களையும் பாதுகாப்பது தொ டர்பாக மீனாட்சிமிஷன் குழந் தைகள் நலப்பிரிவு தலைவர் டாக்டர் கண்ணன் ஆலோசனை தெரிவித்தார்.

மதுரையின் சீதோஷ்ணநிலை தற்போது குளிர்ச்சியாக உள்ளது. பகலில் லேசான வெயில் அடித்த போதிலும், இரவில் குளிரான சூழல் நிலவுகிறது. அவ்வப்போது மழைத் தூறலும் விழுகிறது. மாறி வரும் சீதோஷ்ண நிலையால் குழந்தைகள், பெரியவர்கள் தொற்று நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து மதுரை மீனாட்சிமிஷன் குழந்தைகள் நலப்பிரிவு தலைமை மருத்துவர் அ. கண்ணன் கூறியதாவது:

மழைக்காலத்தில் தேங்கும் நீரால் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை, மார்புச் சளி, ஆஸ்துமா போன்ற நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளன. இந்த நோய்கள் 5 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும். 102 டிகிரி காய்ச்சல் இருக்கும். வைரஸ் காய்ச்சலாக இருந்தால் உடல் வலி அதிகமாக இருக்கும்.

ஆர்.எஸ்.வீ எனும் வைரஸ் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தாக்கும்போது ப்ராங்கியோலைட்டீஸ் எனும் நுரையீரல் நோயை ஏற்படுத்தி மூச்சுத் திணறலை வர வைக்கிறது. இந்த நோய் அதிகரித்து வீசிங் ப்ராங்கைட்டீஸ் என்று சொல்லும் இளப்பு நோயாக மாறும். ஏற்கெனவே ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் பாதிப்புகள் ஏற்படும். மழைக் காலங்களில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் பூஞ்சை நோய்களும் வருகின்றன. அக்குள், தொடை இடுக்குகளில் பூஞ்சைக் காளான் கிருமி தாக்குவதால் படர்தாமரை நோய் வரும். இந்த படர் தாமரை உடலில் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி சிகப்பு நிறத்தில் தோலில் தழும்பு ஏற்பட்டு உடலில் நமைச்சல் ஏற்படும்.

மழைக்காலங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் முட்டையிடுவதால், அதன் மூலம் மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன் குனியா போன்ற நோய்கள் பரவுகின்றன. இதனால் அனை வரும் ஆங்காங்ககே தேங்கும் நீரை உடனடி யாக அப்புறப்படுத்த வேண்டும். தினமும் காய்ச்சிய நீரையே பருக வேண்டும். சளி, காயச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தி குணமடைந்த பின்னர் அனுப்ப வேண் டும்.

வீடு, சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டு்ம். பாத்திரங்களில் தண் ணீர் தேங்கவிடாமல் துடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். சூடான உணவு வகைகளையே சாப்பிட வேண்டும். அதிகமாக மழை பெய்யும்போது ஸ்வெட்டர், குளிர் தடுக்கும் சாதனங்களை பயன்படுத்தலாம். கொசுக்கடியைத் தடுக்க உரிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Agni Devi review | Bobby Simha | Madhoo | Ramya Nambeesan | Sathish

Embiran Movie Review | Rejith Menon | Radhika Preeti | Krishna Pandi

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்: