எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒழுங்கான உணவு உண்ணும் பழக்கம் இல்லாததாலும், ஒழுங்கற்று சக்தியை செலவு செய்வதாலும் அளவுக்கதிகமான உடல் எடை உருவாகிறது. நமது முன்னோர்களின் ‘பொருளாதாரப் பெருக்கம்’ என்பதின்படி உணவு நமது அடிபோஸ் திசுக்களில் சேமிக்கப்பட்டு தேவைப்படும் போது ஆற்றல் அளிக்கிறது. எவ்வாறு உணவு சேமிக்கப் பட்டு பஞ்சத்தின் போது மக்களுக்கு வழங்கப்படுமோ அவ்வாறு. விஞ்ஞான துறையில் வளர்ந்துள்ள நாடுகளில் தொழில்நுட்பங்கள் சுத்தமான உணவு வழங்குவது மட்டுமல்லாது, ஒரு நிலையில் பேரழிவையும் ஏற்படுத்தும். சிறுவயது முதலே குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்த்தால் பல்வேறு பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்க வழக்கங்கள்: ஆடம்பரமான விளம்பரங்கள் மக்களை கவர்ந்து, விலை அதிகமான, ஆற்றல் அதிகம் தரும் உணவு, கொழுப்பு அதிகம் நிறைந்த உணவு, சாதாரண மாவுச்சத்து மற்றும் குறைந்த அளவு நார்ச்சத்து மற்றும் இதர கனிமச்சத்துகள் குறைந்த அளவு மட்டுமே தரும் உணவுப் பொருட்களை உண்ண வைக்கின்றனர். இது தவிர இனிப்பு மற்றும் கொழுப்பு அதிகமுள்ள உணவை உண்ணும் பழக்கம் அதிகரித்துள்ளது.
அதிக உடல் உழைப்பில்லாத வேலை உடற்பயிற்சியின்மை, அதிகமான நேரம் திரையின் முன், தொலைக்காட்சி மற்றும் கணிப்பொறியின் முன் அமர்வது, குறைந்த அளவு வெளி வேலைகளைச் செய்வது. அளவுக்கதிகமான உடல் எடை என்பது உடல் பொருள் அட்டவணையை பொறுத்து கணக்கிடப்படுகிறது. 85-94% என்பது வயதிற்கு பாதகமான சதவீதமாக கருதப்படுகிறது. 95% மேல் அளவுக்கதிகமான உடல் எடையாக கருதப்படுகிறது.
முதன்முதலில் குழந்தையின் அளவுக்கதிகமான உடல் எடை கணக்கெடுப்பின்போது உணவுப் பழக்கவழக்கங்கள், குடும்ப பழக்கவழக்கங்கள் ஆகியவை கருத்தில் கொள்ளப்படுகிறது. ஏனெனில் வெற்றிகரமான மருத்துவ முறைகளுக்கு இந்தப் பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்களும் காரணங்கள். உலக அளவில் வேறுபட்ட ஆய்வுகள் நடத்தியதில் உடற்பருமனால் குழந்தைப்பருவத்திலும், வளர்ந்த நிலையிலும் இருதய நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
குழந்தைப் பருவங்களில் ஏற்படும் உடற்பருமனை சீர்செய்யும் வழிமுறைகள்: எடையை குறைப்பதை விட எடையை பராமரித்தல் முதல் லட்சியம். எடை குறைவு மிக மெதுவான செயலாக இருக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு 0.5 கிலோ வீதமாக 10% எடையை குறைத்தல் என்பது முதல் லட்சியமாக விவரிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். இந்த எடை குறைப்பு குறைந்தது 6 மாத காலம் பராமரிக்கப்பட வேண்டும். வெற்றிகரமான எடைகுறைப்பு மற்றும் எடை பராமரிப்புக்கு முக்கியமான வாழ்வு முறை மாற்றம், அதிகப் படியான உடல் உழைப்பு மற்றும் உணவு, உடற் பயிற்சி, செய்முறை மாற்றங்கள், மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை முறைகள் பரிந்துரைக்கப்படுகிறது.
உடல் பொருள் அட்டவணை(BMI) மற்றும் ஒரு வருடத்திற்கான உடல் பொருள் அட்டவணையை பயன்படுத்தி உடனடியான எடை அதிகரிப்பையும், அடிபோஸ் சேமிப்பும் கணக்கிடப்படுகிறது. செய்முறை மாற்றங்கள் எடுத்துக்காட்டாக உடல் உழைப்பில்லாத வேலையை குறைத்தல், உடல் உழைப்பை அதிகரித்தல், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தை கைவிடுதல், குடும்பத்தினரிடையே கலந்துரையாடலை அதிகரித்தல்.
உணவுப் பழக்க வழக்கங்கள் ஆலோசனை: 1-3 வயது வரை உள்ள குழந்தைகள் இனிப்பு வகைகளை குறைக்க வேண்டும். 1-6 வயது உள்ள குழந்தைகளுக்கு 4-6 Oz மற்றும் 7-18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 8-12 Oz பழரசம் ஒரு நாளைக்கு கொடுக்கலாம். 2 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கொழுப்பு நீக்கிய பால், குறைந்த ஆற்றல் தரும் உணவு, குறைந்த அளவு இடைவேளை உணவு தர வேண்டும். இளவயதினருக்கு குறைந்த கொழுப்புச்சத்து நிறைந்த உணவை விட குறைந்த மாவுச்சத்து எடை குறைப்பதற்கு மிகவும் உடற்பருமன் அதிகமுள்ள குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு உண்ணும் உணவு 800 கிலோ கலோரி மட்டுமே இருந்தால் எடை இழப்பு வேகமாக இருக்கும்.
ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்கள்: உணவின் போது, குழந்தைகளை தண்டிக்கக் கூடாது. உணவு உண்ணும் போது மகிழ்ச்சியாக பேச வேண்டும். பரிசுப் பொருளாக உணவுப் பொருளை உபயோகப்படுத்தக் கூடாது. உணவு விஷயத்தில் பெற்றோர்கள், சகோதர்கள் நல்ல வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். புதிய உணவுப் பொருளையும், சரிவிகித உணவையும் உண்ண வேண்டும். உணவு பலநேரங்களில் வழங்கப்பட வேண்டும். முதலில் விருப்பமில்லாத உணவுப் பொருட்களை பலமுறை தருவதன் மூலம் அதன் மேல் உள்ள வெறுப்புகளை உடைத்து விட வேண்டும். குறைந்த அடர்த்தியுள்ள உணவுப் பொருள் குழந்தைகளின் ஆற்றலைச் சமப்படுத்தியுள்ளன. குழந்தைகளின் விருப்பத்தை தடுப்பது ஆசையை குறைப்பதற்கு பதிலாக தூண்டி விடும். குழந்தைகளின் புது உணவுப் பழக்க வழக்கங்களை பற்றிய விழிப்புணர்ச்சியை வரவேற்க வேண்டும்.
உடல் உழைப்பு: 2 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் தொலைக் காட்சி மற்றும் கணிப் பொறி பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். 2-18 வயதிற்குட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே தொலைகாட்சி காண வேண்டும். படுக்கை அறையில் தொலைக்காட்சிப் பெட்டி வைப்பதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் கணிப்பொறியில் வீட்டுப் பாடம் செய்தவதற்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும். உணவு மற்றும் உடல் உழைப்புடன் மருந்துகளும் உடல் எடையைக் குறைக்க பயன்படுத்தப்படுகின்றன.
உடற்பருமன் வராமல் தடுக்கும் முறைகள்: கர்ப்ப காலத்தில் கர்ப்பமாவதற்கு முன் உடல் பொருள் அட்டவணையை சமப்படுத்துதல். புகைப்பிடித்தலை தவிர்த்தல். அளவான உடற்பயிற்சி. கர்ப்பகால சர்க்கரை நோயில், சர்க்கரை அளவை சமப்படுத்துதல். பிறந்த பின்பும், 3 மாதம் வரை தாய்ப்பால். ஒரு வயது வரை உணவுப் பொருட்கள் மற்றும் இனிப்பு பொருட்கள் தருவதை தள்ளிப் போடுதல். குடும்பங்களில் குறிப்பிட்ட இடம், நேரத்தில் சாப்பிடுதல். நேரம் தவறாமல் சாப்பிடுதல். சாப்பிடும் போது தொலைக்காட்சி பார்க்கக் கூடாது.
சின்னத் தட்டு மற்றும் கிண்ணம் உபயோகித்தல். தேவையில்லாத இனிப்பு, கொழுப்பு மற்றும் பானங்களை தவிர்த்தல். பள்ளிக்கூடங்களில் இனிப்பு வகைகள், சாக்லேட் வகைகள் விற்பதை தடை செய்தல். உடற்கல்வி, உணவியல், அறிவியல் மற்றும் உடல் உழைப்பு பற்றி ஆசிரியர்களுக்கு கற்பித்தல்.
குழந்தைகளுக்கு ஆரம்பப்பள்ளியில் இருந்து உயர் பள்ளி வரை உணவு மற்றும் வாழ்வு முறைபற்றி கற்பித்தல். வாரத்தில் 2-3 முறை 30-45 நிமிடம் உடற்கல்வி கற்பித்தல். சமுதாயத்தில் குடும்பத்தினரின் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு வசதிகளை எல்லா வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் அதிகப்படுத்துதல். எவ்வாறு சுகாதாரமான உணவுப் பொருட்களை வாங்க வேண்டுமென கற்பித்தல்.
இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் குழந்தைகளை ஆரோக்கியமாக உடல் பருமன் இன்றி வளர்க்கலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
உதய்பூரில் இன்று நடக்கும் திருமண நிகழ்வில் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகாவை கரம் பிடிக்கிறார்
01 Feb 2026ஐதராபாத், விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி ராஜஸ்தானின் உதய்பூரில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இன்று திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
-
தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி தகுதிக்கான ‘டெட்’ தேர்வில் 1.50 லட்சம் பேர் தேர்ச்சி
01 Feb 2026சென்னை, பள்ளி ஆசிரியர் பணித் தகுதிக்கான ‘டெட்’ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு 1.50 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
01 Feb 2026புதுடெல்லி, சி.பி.ஐ. புலன்விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
-
மத்திய பட்ஜெட் 2047-ல் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில் உள்ளது: பிரதமர் நரேந்திரமோடி புகழாரம்
01 Feb 2026புதுடெல்லி, தொலைநோக்குடன், நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, 2047-ல் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில
-
தமிழ்நாட்டிற்கு முக்கிய அறிவிப்புகள் இல்லை: பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. எம்.பி.,க்கள் கடும் முழக்கம்
01 Feb 2026புதுடெல்லி, பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என தி.மு.க. எம்.பி.,க்கள் முழக்கமிட்டனர்.
-
மத்திய பட்ஜெட்டில் எஸ்.டி.டி.யை அதிகரித்ததால் பங்குச்சந்தைகள் திடீர் வீழ்ச்சி
01 Feb 2026புதுடெல்லி, மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எஸ்.டி.டி.
-
தைப்பூசத் திருநாள்: இ.பி.எஸ். வாழ்த்து
01 Feb 2026சென்னை, தைப்பூசத் திருநாள் வினைகள் விலகி வெற்றிகள் மலரும் நாள் என எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ஜனவரி மாதம் ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.1.93 லட்சம் கோடி..!
01 Feb 2026புதுடெல்லி, கடந்த ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல்(சரக்கு மற்றும் சேவை வரி) ரூ.1.93 லட்சம் கோடியை தாண்டியது.
-
முன்னாள் முதல்வர் ஓமந்தூராருக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
01 Feb 2026சென்னை, சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்வி வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஓமந்தூராருக்குத் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
வரும் 2026 - 27ஆம் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.17.2 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு: பட்ஜெட்டில் அறிவிப்பு
01 Feb 2026டெல்லி, வரும் 2026 - 27ஆம் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.1.27 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எச்.ராஜாவை நேரில் சென்று நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்
01 Feb 2026சென்னை, பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா உடல்நலம் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார்.
-
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: தைப்பூசத்திற்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திரமோடி
01 Feb 2026புதுடெல்லி, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று தைப்பூசத்தை முன்னிட்டு தமிழில் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
01 Feb 2026சென்னை, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
சாமானிய மக்களுக்கு எதுவும் இல்லை: மத்திய பட்ஜெட் குறித்து மம்தா கருத்து
01 Feb 2026டெல்லி, 2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மக்களுக்கு விரோதமான பட்ஜெட் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு ஜனாதிபதியுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
01 Feb 2026டெல்லி, 2026 - 27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பு ஜனாதிபதி திரெளபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார்.
-
லித்தியம் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி ரத்து நீட்டிப்பு
01 Feb 2026டெல்லி, மின்சார வாகனங்களை ஊக்குவிக்க லித்தியம் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி ரத்து நீட்டிக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன் நிதியமைச்சக குழுவினருடன் நிர்மலா சீதாராமன் புகைப்படம்
01 Feb 2026டெல்லி, எதிர்வரும் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட், பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
-
வார ராசிபலன்
01 Feb 2026


