முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எங்களது வெற்றிக்கு வித்திட்டவர் முதல்வர் ஜெயலலிதா தான்: கூடைப்பந்து போட்டியில் தேசிய சாதனை படைத்த தமிழக வீராங்கனை பேட்டி

செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2016      விளையாட்டு
Image Unavailable

சென்னை, எங்களது வெற்றிக்கு காரணமே முதல்வர் ஜெயலலிதா தீட்டிய திட்டங்கள்., எனவே எங்களது. வெற்றியை முதல்வருக்கு அர்ப்பணிக்கிறோம் என்று தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் வென்ற தமிழக அணி வீராங்கனை அவந்தி வர்தன் தெரிவித்தார்.

16 வயதுக்குட்பட்ட 33 வது தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி கர்நாடக மாநிலத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட தமிழகத்தை சேர்ந்த பெண்கள் அணி தேசிய அளவில் முதல் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. 33 ஆண்டுகளுக்கு பின்னர் மகளிர் அணியின் இந்த சாதனைக்கு இந்தியா முழுவதும் வாழ்த்துக்கள் குவிக்கின்றன. இந்த போட்டியில் பங்கேற்ற ஆடவர் அணி தேசிய அளவில் 3 வது இடத்தையும் பிடித்து சாதனைப் படைத்தனர். தேசிய அளவில் சாதனை படைத்த மகளிர் அணியின் கேப்டன் அவந்தி வர்தன், நேற்று பெற்ற தங்கப்பதக்கத்தோடு அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார். முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து மருத்துவமனையில் விசாரித்தார், இதன்பின்னர் அவந்தி வர்தன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முதல்வர் ஜெயலலிதா விளையாட்டுத்துறைக்காக பல்வேறு திட்டங்களை தீட்டினார், பல்வேறு சலுகைகளை வழங்கினார். தமிழகம் விளையாட்டுத்துறையில் முன்னேற அவர் அளித்த திட்டங்கள் தான் எங்களை சாதனை படைக்க செய்தது. தேசிய அளவில் நாங்கள் படைத்த சாதனைக்கு முதல்வர் அம்மா தான் மிக முக்கிய காரணம் .எனவே அம்மாவுக்கு இந்த வெற்றிக்கோப்பையை அர்ப்பணிக்கிறோம் என்று தெரிவித்தார், இந்த பேட்டியின் போது ஆடவர் அணியில் மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்த அணியை சேர்ந்த அரவிந்தகுமாரும் உடனிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்