முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி தலைமையில் வரும் 20-ம் தேதி தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடக்கிறது

சனிக்கிழமை, 10 டிசம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

 சென்னை  - கருணாநிதி தலைமையில் திமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 20-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது ,

''கருணாநிதி தலைமையில் திமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 20-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் திமுகவின் ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்படும். பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

திமுகவின் அடுத்த தலைவர் யார்? என்ற கேள்வி நீடித்து வரும் நிலையில், அதற்கான பதில் இந்த பொதுக்குழுவில் முறையாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்