மழை வெள்ளத்தில் மூழ்கிய கார்களை பராமரிப்பது எப்படி?

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016      மோட்டார் பூமி
man-in-car 2016 12 22

அடிக்கடி வீசிடும் புயல்கள் காரணமாக சிங்கார சென்னை மற்றும் வட மாவட்டங்கள் கனமழையால் சிதைந்துள்ள நிலையில் பல கார்கள் மற்றும் பைக்குகள் நீரில் மூழ்கி கிடப்பது அன்றாட நிகழ்வாகி விட்டது. மழை வெள்ளத்தில் மூழ்கிய கார் மற்றும் பைக்குகளை என்ன செய்வது ? எவ்வாறு மீண்டும் பயன்படுத்தலாம் என்பதற்கு சில அறிவுரைகள் இதோ...

வெள்ளத்தில் மூழ்கிய காரை திரும்ப பயன்படுத்த முடியுமா ? பயன்படுத்த ஏற்ற முறையால் மாற்றுவது எவ்வாறு என பல கேள்விகள் உங்கள் மனதில் உள்ளனவா ?

பாதிக்கப்பட்ட கார்களில் செய்ய கூடாதவை :

எந்த காரணத்திற்காகவும் வாகனத்தை ஸ்டார்ட் செய்யவே கூடாது.

கார் மற்றும் பைக் பற்றி முழுமையான அனுபவம் இல்லாதவராக நீங்கள் இருந்தால் வாகனத்தில் எந்தவொரு வேலையும் செய்யாதீர்கள்.

தற்கால வாகனம் என்றால் மெக்கானிக் உதவியை நாடுவதனை விட நேரடியாக அங்கிகரிக்கப்பட்ட சேவை மையத்தை தொடர்பு கொள்ளுங்கள்.

செய்ய வேண்டியவை:

நீங்களாகவே அல்லது தெரிந்த மெக்கானிக் வழியாகவோ எந்தவொரு வேலையும் செய்ய வேண்டாம் முடிந்தவரை வாகனத்தை உங்கள் சர்வீஸ் சென்டருக்கு டோ செய்து கொண்டு செல்லுங்கள்.

நவீன வாகனங்கள் பெரும்பாலும் இசியூ வழியாகவே இயக்கும் வகையிலான அமைப்பினை கொண்டுள்ளது என்பதனால் வயரிங் சிஸ்டம் மற்றும் சென்சார்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும்.

அனுபவமுள்ள மெக்கானிக் அல்லது அங்கிகரிக்கப்பட்ட சேவை மையத்தை தொடர்பு கொண்டு அவர்களின் உதவியுடன் வாகனத்தில் முதற்கட்ட பரிசோதனையை செய்யவும்.

பெரும்பாலும் வாகனத்தின் பேட்டரி இணைப்பினை துண்டித்து இருக்கமாட்டீர்கள் என்பதனால் மிகவும் கவனமாக பேட்டரி இணைப்பினை துண்டியுங்கள்.

என்ஜின் ஆயில் தன்மை மற்றும் கூலன்ட் வாட்டர் போன்றவற்றில் தண்ணீர் கலந்துள்ளதா என்பதனை சோதனை செய்யவும்.

தற்கால வாகனம் என்றால் 99 % நீர் என்ஜினுக்குள் செல்ல வாய்ப்புகள் குறைவுதான். ஆனால் எரிபொருள் டேங்க் வழியாக செல்ல வாய்ப்புக் உள்ளது.

நவீன வாகனத்தின் பெரும்பாலான இயக்கம் செனசார் துனையுடனே நடக்கின்றது. எனவே சென்சார் பழுதடைந்திருந்தால் வாகனம் இயங்காது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனம் என்றால் கண்டிப்பாக இதனை செய்துவிடுங்கள் : என்ஜின் ஆயில் ஏர் ஃபில்ட்டர் , ஏசி ஃபில்ட்டர் , ஆயில் ஃபில்ட்டர் போன்றவை மாற்றிவிடுங்கள்.

மேலும் இன்டிரியரில் பெரும்பாலும் தண்ணீர் புகுந்திருந்தால் உங்கள் வாகனத்தின் உட்புறத்தை முழுமையாக மறுசீரமைக்க வேண்டியது கட்டாயமாகும்.

டேஸ்போர்டு, இருக்கைகள் , பாடி பிளாட்ஃபாரம் மேட் ஏசி போன்றவற்றை மறுசீரமைப்பது மிக அவசியம். இல்லையென்றால் அவற்றில் நீர் மற்றும் கழிவுகள் தேங்கி இருக்கும்.  ஜாக்கிரதை..

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்: