Idhayam Matrimony

பிரதமருக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது: இந்தியாவின் அந்தஸ்து உயர்கிறது: அமைச்சர் அமித்ஷா பெருமிதம்

புதன்கிழமை, 17 டிசம்பர் 2025      இந்தியா
Amit-Shah 2023-11-17

புதுடெல்லி, பிரதமருக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கியதுக்கு  இந்தியாவின் அந்தஸ்து உயர்ந்துள்ளது என்று அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜோர்டான் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு எத்தியோப்பியா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் பிரதமர் அபி அகமது அலியுடன் இந்தியா-எத்தியோப்பியா இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருதான 'தி கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா' வழங்கப்பட்டது. 

இந்த நிலையில், பிரதமருக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கப்பட்டிருப்பது இந்தியாவின் அந்தஸ்தை பிரதிபலிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையான தருணம். பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு வெளிநாடுகளில் கிடைக்க பெற்ற 28-வது உயரிய விருது இதுவாகும். இந்த விருது பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் உலக அரங்கில் இந்தியாவின் உயர்ந்து வரும் அந்தஸ்தை பிரதிபலிக்கிறது. பிரதமருக்கு அளிக்கப்பட்ட இந்த மரியாதை இந்தியாவுக்கும் எத்தியோப்பியாவுக்கும் இடையிலான நட்புறவில் ஒரு மைல்கல்லாக நிலைத்திருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து