Idhayam Matrimony

டி-20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் புதிய சாதனை: அதிக புள்ளிகள் பெற்ற முதல் இந்திய வீரர் வருண் சக்ரவர்த்தி

புதன்கிழமை, 17 டிசம்பர் 2025      விளையாட்டு
Varun-Chakravarthy-2025-12-

துபாய், ஆடவருக்கான தரவரிசை பட்டியலை சிறிய மாற்றத்துடன் ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. அதில் டி-20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி முதலிடத்தில் தொடர்கிறார். இதன் மூலம் டி-20 பந்து வீச்சாளர்கள் தரவரிசை புள்ளிகளில் அதிக புள்ளிகள் பெற்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

818 புள்ளிகளுடன்.... 

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி-20 தொடரில் சிறப்பாக பந்துவீசிய நிலையில், வருண் சக்ரவர்த்தி 818 புள்ளிகளை பெற்று அசத்தியுள்ளார். இதன் மூலம் டி-20 பந்து வீச்சாளர்கள் தரவரிசை புள்ளிகளில் அதிக புள்ளிகள் பெற்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை வருண் சக்கரவர்த்தி படைத்துள்ளார். மேலும் டி-20 பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்ற வீரர் 8-வது வீரர் என்ற சாதனையை வருண் சக்கரவர்த்தி படைத்துள்ளார். இந்த பட்டியலில் பாகிஸ்தான் வீரர் உமர் குல் (865 புள்ளிகள்) முதல் இடத்தில் உள்ளார்.

அதிக புள்ளிகள் பெற்ற வீரர்கள்:

1) உமர் குல் (பாகிஸ்தான்) 865.

2) சாமுவேல் பத்ரீ (வெஸ்ட் இண்டீஸ்) 864.

3) டேனியல் வெட்டோரி (நியூசிலாந்து) 858.

4) சுனில் நரைன் (வெஸ்ட் இண்டீஸ்) 832.

5) ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்) 828.

6) தப்ரைஸ் ஷம்சி (தென்னாப்பிரிக்கா) 827.

7) ஷாஹித் அப்ரிடி (பாகிஸ்தான்) 822.

8) வருண் சக்ரவர்த்தி (இந்தியா) 818.

9) ஷதாப் கான் (பாகிஸ்தான்) 811.

10) வனிந்து ஹசரங்கா (இலங்கை) 809.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து